twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் 8 பதவிகளுக்கான தேர்தல்...

    |

    Film chamber election held today.
    சென்னை: தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் உட்பட 8 பதவிகளுக்கான தேர்தல் இன்று சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

    தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட 2,085 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    ஆண்டுக்கொருமுறை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய கட்டிடம் கட்டப்படாததால் கல்யாண் தலைவராக உள்ளார்.

    இந்நிலையில் விரைவில் தலைவர் கல்யாணின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் காலை 9 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விபரம் இன்று மாலை சுமார் 7.30 மணிக்குள் அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

    இத்தேர்தலில் பிராக்ஸி' எனப்படும் ஓட்டுப் போட முடியாதவர்களுக்காக மற்றவர்கள் ஓட்டுப் போடும் முறையைக் கண்டித்து கே.ஆர் தலைமையிலான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    After four years the South Indian Film Chamber election held today in Chennai. The Tamil film producers have boycotted the election.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X