twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெ. ஆதரவு நடிகர்- நடிகைகள் போராட்டத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்

    |

    சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப் பட்ட சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என நேற்றிரவு சினிமா செய்தித் தொடர்பாளர் ஒருவருக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

    18 வருடங்களாக நடைபெற்று வந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இப்போராட்டங்கள் அதிமுகவினருக்கு ஆதரவாக பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ் திரையுலகினர்...

    தமிழ் திரையுலகினர்...

    தமிழ் திரையுலகினரும், ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்று வரும் போராட்டத்தில் நடிகர்- நடிகைகள், உள்ளிட்ட திரைப்பட துறையினர் பங்கேற்று வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல்...

    வெடிகுண்டு மிரட்டல்...

    இந்நிலையில், திரையுலகினரின் இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் நேற்று வெடிகுண்டு மிரட்டல் ஒன்று விடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

    குண்டு வச்சிருக்கேன்...

    குண்டு வச்சிருக்கேன்...

    சினிமா செய்தி தொடர்பாளரான ராதாகண்ணன் என்பவரின் செல்போன் நம்பருக்கு நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மர்ம போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் குண்டு வெடிக்கும். எல்லோரும் மொத்தமாக போய் சேருங்கள் என மிரட்டியுள்ளார்.

    போலீஸ் சோதனை...

    போலீஸ் சோதனை...

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார் ராதாகண்ணன். உடனடியாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் மேடைப் பகுதிக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    போலி மிரட்டல்...

    போலி மிரட்டல்...

    சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகப் படும் படியான பொருட்கள் எதுவும் கிடைக்காததால், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்தனர்.

    விசாரணை....

    விசாரணை....

    ராதாகண்ணனுக்கு மிரட்டல் அழைப்பு வந்த செல்போன் நம்பர் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபரைக் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    English summary
    An anonymous caller issued a telephonic threat that a bomb is planted for the stage opposite the State guest house, Chepauk hosting the event. Bomb squads were despatched to the location and a thorough inspection for nearly an hour proved the threat to be a hoax. Police are probing further to track the anonymous caller.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X