»   »  ச்ச்சே, என்ன வாரம்யா: 4 பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கும் திரையுலகம்

ச்ச்சே, என்ன வாரம்யா: 4 பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கும் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் மட்டும் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகை, பாடல் ஆசிரியர் என நான்கு பேரை பறிகொடுத்துவிட்டு நிற்கிறது திரையுலகம்.

கடந்த வாரம் சினிமா துறைக்கு மோசமான வாரம் என்றே கூற வேண்டும். அடுத்தடுத்து நான்கு பேரை இழந்துவிட்டு நிற்கிறது திரையுலகம். அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சியால் திரையுலகினர் கதி கலங்கிப் போயுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

ஜோதி லட்சுமி

ஜோதி லட்சுமி

பிரபல நடிகை ஜோதி லட்சுமி ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் கடந்த 8ம் தேதி அதாவது திங்கட்கிழமை உயிர் இழந்தார். கடைசி வரை அவர் கேமரா முன்பு நடித்துக் கொண்டிருந்தார். நோயால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

பஞ்சு அருணாச்சலம்

பஞ்சு அருணாச்சலம்

பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ஜோதி லட்சுமி இறந்த மறுநாள் மரணம் அடைந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததால் திரையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

சசி சங்கர்

சசி சங்கர்

இப்படி அடுத்தடுத்து இரண்டு பேர் இறந்துவிட்டார்களே என்று திரையுலகினர் கவலையில் இருந்தபோது பஞ்சு அருணாச்சலம் இறந்த மறுநாள் சூர்யா, ஜோதிகாவை வைத்து பேரழகன் படத்தை இயக்கிய சசி சங்கர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.

நா. முத்துக்குமார்

நா. முத்துக்குமார்

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். சாகும் வயதா முத்துக்குமாரா என்று உலக நாயகன் கமல் முதல் பல பிரபலங்கள் துக்கம் தாங்காமல் புலம்பிவிட்டனர்.

என்ன ஒரு வாரம்

என்ன ஒரு வாரம்

கடந்த வாரத்தை நினைத்தால் திரையுலக பிரபலங்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அடுத்தடுத்து நான்கு இழப்புகள். இனியும் இழப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இந்த வாரத்தை துவங்கியுள்ளனர்.

English summary
Film industry has lost actress Jyothi Lakshmi, producer Panchu Arunachalam, director Sasi Shanker and lyricist Na. Muthukumar last week.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil