»   »  ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி: சசிகலாவுக்கு தாணு ஆதரவு

ஜெயலலிதா நினைவிடத்தில் திரையுலகினர் அஞ்சலி: சசிகலாவுக்கு தாணு ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்தினர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்வலமாக மெரினா கடற்கரைக்கு சென்றனர்.

Film industry people pay tribute at Jaya's memorial

அங்கு உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கலைப்புலி எஸ் தாணு மற்றும் பெப்சி சிவா தலைமையில் அஞ்சலி செலுத்தினர்.

Film industry people pay tribute at Jaya's memorial

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தாணு கூறுகையில்,

ஜெயலலிதாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா வர வேண்டும் என்றார்.

அஞ்சலி செலுத்திய பிறகு அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Film industry people paid their tribute at former CM Jayalalithaa's memorial in Marina beach on friday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil