twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று முதல்... ஒட்டுமொத்த சினிமாவும் ஸ்ட்ரைக்... வெறிச்சோடிய கோடம்பாக்கம்!

    By Shankar
    |

    Recommended Video

    நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

    இன்று வெள்ளிக்கிழமை... வாராவாரம் ஆரவாரமாக புதுப் படங்கள் வெளியாக வேண்டிய நாள்.

    ஆனால் கடந்த மூன்று வெள்ளிக்கிழமைகளாகவே எந்த அரங்கிலும் புதிய திரைப்படங்கள வெளியாகவில்லை.

    இந்த வாரம் புதிய படங்களின் ரிலீசுக்கு மட்டுமல்ல... தியேட்டர்கள், ஷூட்டிங்குகள், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் என அனைத்துக்கும் சேர்த்தே ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவின் முதலாளிகள் அமைப்பான தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    Film Industry total strike from Today

    இந்த வேலை நிறுத்தத்துக்கு முழுமையான காரணம் க்யூப், யுஎப்ஓ எனப்படும் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் விதிக்கும் கட்டணங்கள்தான். இந்தக் கட்டணங்களை எதிர்த்து முதலில் புதுப்பட ரிலீஸை நிறுத்தினார்கள். ஆனால் அப்படியும் கட்டணங்கள் குறையவில்லை. சென்னை, ஹைதராபாதில் நடந்த பேச்சுவார்த்தைகளிலும் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை.

    திரையுலகில் முழுமையான ஒரு மாற்றம் வேண்டும் என்பதால் தயாரிப்பாளர் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பிற திரையுலக அமைப்புகள் ஆதரவளித்து வருகின்றன. அதன் விளைவுதான் புதுப்பட நிறுத்தம், தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்புகள் நிறுத்தம் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன், பிரஸ் மீட்கள் என அனைத்துமே நிறுத்தப்பட்டுள்ளன. அபிராமி ராமநாதன் மட்டும் இதில் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார். ஆனால் ஒட்டுமொத்த திரைத்துறை நலனுக்கு எதிராக அவர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அந்த ஆவர்த்தனம் எத்தனை நாள் தொடரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நல்லது நடக்கிறதா... பார்க்கலாம்!

    English summary
    From Today, March 16, the whole film industry is observing a complete strike to recorrect the Industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X