»   »  தமிழ் சினிமா தகவல் களஞ்சியம், முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்!

தமிழ் சினிமா தகவல் களஞ்சியம், முதல் பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் என்று போற்றப்பட்ட, மூத்த பிஆர்ஓ பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தவர் பிலிம் நியூஸ் ஆனந்தன்.

Film News Aanandan passed away

தமிழ் சினிமாவின் முதல் பிஆர்ஓ என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அதுமட்டுமல்ல, சினிமாவில் மக்கள் தொடர்பு என்ற பணியை அறிமுகப்படுத்தியவரும் ஆனந்தன்தான்.

கலைமாமணி விருது பெற்ற பிலிம்நியூஸ் ஆனந்தன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் கருணாநிதி, இப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு நெருக்கமானவர். சிவாஜி கணேசன் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்.

Film News Aanandan passed away

தனது தள்ளாத வயதிலும் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்ற நினைப்பின்றி, தொடர்ந்து சினிமா தகவல்களைச் சேகரித்து வந்தார். தமிழ் சினிமா வரலாறு பற்றிய அவருடைய புத்தகம் திரைத்துறையினருக்கு ஒரு என்சைக்ளோபீடியா. அந்தப் புத்தகத்தை தமிழக அரசே வெளியிட்டது.

இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Film News Aanandan, senior PRO of Tamil Cinema was passed away today at his home.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil