»   »  இதுவரை இல்லாத ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்- நடிகைகள்!

இதுவரை இல்லாத ஆர்வத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்- நடிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடந்த தேர்தலில் தமிழ் நடிகர் நடிகைகள் பெரும் உற்சாகத்துடன் வந்து வாக்களித்ததைப் பார்க்க முடிந்தது.

தமிழக சட்டமன்றத்துக்கு இன்று நடந்த தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஒரு பக்கம் வெளுத்த மழை, இன்னொரு பக்கம் கொளுத்தும் வெயில் என பருவநிலை படுத்தினாலும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வாக்களித்தனர் பொதுமக்கள்.

Film personalities cast votes with enthusiasm

இன்னொரு பக்கம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வாக்களித்தது இந்த முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் முதல் நபராக வந்து வாக்களித்தார் ரஜினி. அதேபோல நடிகர் அஜீத் தனது மனைவி மற்றும் தாயாருடன் வந்து காத்திருந்து வரிசையில் நின்று வாக்களித்தார்.

Film personalities cast votes with enthusiasm

நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் விஜய் வாக்களித்தார்.

கமல் ஹாஸன், தனது மகள் மற்றும் நடிகை கவுதமியுடன் வந்து வாக்களித்தார்.

நடிகர்கள் சிவகுமார், கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா, ராகவா லாரன்ஸ், இமான் அண்ணாச்சி, பிரசன்னா, நடிகைகள் மீனா, த்ரிஷா, நமிதா, ரம்பா என ஏராளமானோர் இன்று காலையிலேயே வாக்களிக்க வந்துவிட்டனர்.

சென்னையில் வாக்குரிமை உள்ள திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் தவறாமல் வாக்களித்தனர். வெளியூர்களில் வாக்குரிமை உள்ள நடிகர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குப் போய் வாக்களித்தனர். மதுரையில் வாக்குரிமை உள்ள நடிகர் - இயக்குநர் சசிகுமார் கொட்டும் மழையிலும் தனது ஜனநாயகக் கடமையைச் செய்ததோடு, வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திரையுலகப் பிரபலங்கள் இந்த அளவுக்கு திரண்டு வாக்குச் சாவடிக்கு வந்தது இந்த ஆண்டுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: voting
English summary
Most of film personalities have casted their votes today in TN Assembly elections.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil