»   »  ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!

ஜெயலலிதாவுக்கு இளையராஜா, பாரதிராஜா, விவேக் கண்ணீர் அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது தாய்வீடான தமிழ் திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது.

திரைப் பிரபலங்கள் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பி வாசு, சேரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் இன்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Film personalities pay last respect to Jayalalithaa

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "தமிழகத்தில் இனி இப்படி ஒரு துணிச்சலான வீரத் தலைவி வர வாய்ப்பே இல்லை. அற்புதமான தலைவி," என்றார்.

நடிகர் விவேக் பேசுகையில், "தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போன்ற ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது. அவரை இழந்து இன்று உண்மையிலேயே தமிழக மக்கள் ஆறாத துயரில் உள்ளனர். தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தது போலத் தவிக்கின்றனர்," என்றார்.

மேலும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நடிகர் அருண்பாண்டின், நடிகர் பிரபு, விக்ரம் பிரபு, மன்சூர் அலிகான் உள்பட பலரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

English summary
Film personalities like Ilaiyaraaja, Bharathiraja, Vivek have paid their last respect to Late CM Jayalalithaa

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil