»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் வானம் வசப்படும் படம் திரையிடப்படுகிறது.

ஹங்கேரி, கனடா, இத்தாலியப் படங்கள் பங்கேற்கும் இந்த விழாவில் தமிழில் இருந்து வானம் வசப்படும் மற்றும்காக்க.. காக்க.. ஆகியவையும் பங்கேற்கின்றன. இதில் காக்க.. காக்க.. வர்த்தரீதியில் பெற்ற மாபெரும்பெற்றிக்காகக் திரையிடப்படுகிறது. வானம் வசப்படும் கதையம்சத்துக்காக இடம் பிடிக்கிறது.

தமிழ் சினிமா கேமராமேன்களுக்கு இந்திய அளவில் தனி மரியாதை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் பாலுமகேந்திராமற்றும் பி.சி.ஸ்ரீராம். ஒளிப்பதிவாளர்களாக மட்டுமின்றி இயக்குநர்களாகவும் தங்களது முத்திரையைப்பதித்தவர்கள்.

வியாபார ரீதியாக இவர்களது பல படங்கள் வெற்றி பெறாவிட்டாலும், கலை ரீதியாக நிராகரிக்கப்படமுடியாதவை. அதற்கு பி.சி.ஸ்ரீராம் இயக்கி சமீபத்தில் வெளிவந்த வானம் வசப்படும் சரி உதாரணம்.

ரிலீஸான வேகத்திலேயே படம் பெட்டியில் பெட்டிக்குள் திரும்பி விட்டாலும், சினிமா விமர்சகர்கள் பலரின்பாராட்டுக்களைப் பெற்றது. இப்போது இந்தப் படம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது.

கடந்த 30ம் தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் முடிவடைகிறது. விழாவில் குறிப்பாக ஹங்கேரி, கனடாமற்றும் இத்தாலி நாட்டுப் படங்கள் திரையிடப்படுகின்றன. வானம் வசப்படும் படத்துடன் இலவச காட்சியாககாக்க காக்க திரைப்படமும் திரையிடப்படுகிறது.

மேலும் ஹாரி வில்லா, பெர்பக்ட் ஹஸ்பெண்ட் மற்றும் ஆஸ்கார் விருது பெற்ற லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், லாஸ்ட்சாமுராய், மான்ஸ்டர் மற்றும் கோல்ட் மெளண்டன் படங்களும் விழாவில் பங்கேற்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், திரைவிமர்சகர்கள், சினிமா ஆர்வலர்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil