»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காந்தப் படுக்கைகள் விற்பனை தொடர்பான மோசடியில் பல நடிகைகளின் பெயர்களும் அடிபடஆரம்பித்துள்ளன.

செயின் மார்க்கெட்டிங், மல்டிலெவல் மார்க்கெட்டிங் என்ற பெயர்களில் காந்தப் படுக்கைகள்உள்ளிட்ட பல பொருள்களை விற்று வந்த இரு நிறுவனங்கள் பொது மக்களிடம் ரூ. 16 கோடிரூபாய் மோசடி செய்ததையடுத்து அந் நிறுவங்களைச் சேர்ந்த பலரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

காந்தப் படுக்கைகளை வாங்க ஆட்களைச் சேர்த்துவிட்டால் கமிஷன் தருவதாகக் கூறி இந்தமோசடி நடந்துள்ளனது.

முன் பணமாக ஒவ்வொருவரிடமும் பல ஆயிரம் வாங்கியுள்ள இந்தநிறுவனங்கள் படுக்கையையும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இந் நிலையில் இந்த செயின் மார்க்கெட்டிங்கில் பெரிய நிறுவனங்களைச் சேர்ந்ததொழிலாளர்களை மொத்தமாகச் சேரச் செய்ய நட்சத்திர ஹோட்டல்களில் சிறப்பு விருந்துநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ள விவரம் இப்போது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விருந்து நிகழ்ச்சிகளில் பெரிய தனியார், அரசு நிறுவனங்களின் அதிகாரிகளைக் கலந்துகொள்ளச் செய்து அவர்களுக்கு மதுவும் உணவும் பரிமாறப்பட்டுள்ளன. கூடவே நடிகைகளின்டான்ஸ் நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் விந்தியா, சங்கவி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் டான்ஸ் ஆடியுள்ளனர்.மோசடி நிறுவனத்தின் விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று அப்பாவிகளை ஏமாற்ற இவர்களும்காரணமாக இருந்துள்ளதாக போலீசார் கருதுகின்றனர்.

இதனால் இந்த நடிகைகள் மீதும்நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக சென்னை குற்றப் பிரிவு துணை கமிஷ்னர்கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil