விளம்பரங்கள் மூலம் பிரபலமானவரும் அனிருத்தின் உறவினருமான எஸ்வி ரமணன் காலமானார்: பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: ஊடகத்துறையில் வானொலி விளம்பரங்கள் மூலம் பிரபலமானவர் எஸ்வி ரமணன்.

பிரபல தயாரிப்பாளர், இயக்குநர் கே சுப்பிரமணியம் மகனான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

மறைந்த எஸ்.வி. ரமணன் இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி. ரமணன்

கே சுப்பிரமணியத்தின் மகன் எஸ்.வி. ரமணன்

தமிழ்த் திரைப்பட உலகின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், ஸ்டுடியோ உரிமையாளர் என பன்முக ஆளுமையாக வலம் வந்தவர் இயக்குநர் கே.சுப்பிரமணியம். அவரது மகனும் வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் எஸ்.வி.ரமணன். தனது மாயக் குரலால் விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ள எஸ்.வி. ரமணன், ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வந்தவர். எஸ்.வி. ரமணனின் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

காலமானார் எஸ்.வி. ரமணன்

காலமானார் எஸ்.வி. ரமணன்

சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார் எஸ்.வி. ரமணன். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று (செப்.26) அதிகாலை அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து எஸ்.வி. ரமணின் மறைவுக்கு திரை பிரபலங்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரமணனுக்கு மனைவியும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

நாடகக் கலையில் ஆர்வம் கொண்டவர்

நாடகக் கலையில் ஆர்வம் கொண்டவர்

திரைப்பட தயாரிப்பாளர் கே சுப்ரமணியத்தின் மகனான ரமணன், நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். அதேபோல், எஸ்.வி. ரமணன் ஆவணப்படத் தயாரிப்பாளராகவும், தூர்தர்ஷனுக்காக பல தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அதன்மூலம் அதிக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அகில இந்திய வானொலியில் அவரது பாரிடோன் குரலில் ஒலித்த விளம்பரங்கள் இன்றும் பிரபலமாக உள்ளன. ஆன்மீகம், கலை, கட்டடக்கலை, தேசியவாதம் வரை அவரது ஆவணப்படங்கள் பரவலாக பாராட்டைப் பெற்றுள்ளன.

இசையமைப்பாளர் அனிருத்தின் உறவினர்

இசையமைப்பாளர் அனிருத்தின் உறவினர்

எஸ்.வி. ரமணின் சகோதரி டாக்டர் பத்மா சுப்ரமணியம் பிரபலமான பரத நாட்டிய நடனக் கலைஞர். அதேபோல் அவரது சகோதரர் அபஸ்வரம் ராம்ஜி புகழ்பெற்ற இசைக் கலைஞர். இன்று தமிழ்த் திரையுலகையே தனது இசையால் கலக்கிவரும் அனிருத், மறைந்த எஸ்.வி ரமணனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் அவரது ஆவணப்படம் ஒன்றிற்கு குரல் கொடுத்துள்ளதும் சிறப்புக்குரியது. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உயிரிழந்த எஸ்.வி. ரமணன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X