»   »  படமா எடுக்கிறாங்க, எங்காவது ஓடிப் போகலாம் போல இருக்கிறது: ஜெயா பச்சன்

படமா எடுக்கிறாங்க, எங்காவது ஓடிப் போகலாம் போல இருக்கிறது: ஜெயா பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தற்போது வரும் படங்களை பார்த்தால் எங்காவது அமைதியான இடத்திற்கு ஓடிப் போக வேண்டும் போல் உள்ளது என பாலிவுட் நடிகை ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்து வரும் மும்பை திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஜெயா பச்சன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில்,

கலை

கலை

முன்பு எல்லாம் இயக்குனர்கள் படங்கள் மூலம் கலையை உருவாக்கினார்கள். ஆனால் தற்போது படம் என்பது பணம் மற்றும் வியாபாரம் ஆகிவிட்டது.

வெட்கம்

வெட்கம்

காய் மறை இலை மறையாக எதையும் தற்போது கூறுவது இல்லை. மக்களுக்கு அப்படி கூறுவதே மறந்துவிட்டது. அன்பை வெளிப்படையாக காட்டுவது சிறப்பு என்று நினைக்கிறார்கள். மக்கள் வெட்கப்படுவதே இல்லை.

பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபீஸ்

தற்போது பாக்ஸ் ஆபீஸ் என்கிறார்கள், ரூ. 100 கோடி படங்களாம், முதல் வார வசூலாம். இது எல்லாம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த காலத்தில் வரும் படங்களில் ஒரு சிலவற்றில் மட்டுமே இந்திய கலாச்சாரம் தெரிகிறது.

சினிமா

சினிமா

உணர்ச்சிகளை, சொல்ல விரும்புவதை சப்தமில்லாமல் அழகாக சொல்லலாம். ஆனால் தற்போது உள்ள சினிமாவில் எதையும் பளிச்சென்று சப்தமாக கூறுவதை பார்த்தால் மன அழுத்தம் ஏற்படுகிறது. எங்காவது அமைதியான இடத்திற்கு ஓடிப் போகத் தோன்றுகிறது.

English summary
Veteran actress Jaya Bachchan says there was a time when Indian filmmakers used to create art but now films are more about numbers and business.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil