»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழக திரையுலக வரலாறு குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ள பிலிம் நியூஸ் ஆனந்தனின் சேகரிப்புகள்அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

அவரது சேகரிப்புகளுக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளது.

தமிழக சினிமா குறித்த அனைத்து வரலாற்றுத் தகவலகளையும் விரல் நுனியில் வைத்திருப்பவர் பிலிம் நியூஸ் ஆனந்தன். பழையபடங்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர்கள் என எந்த விவரம் கேட்டாலும் தருவார்.

இப்போதும் கூட அரசுக்கோ, திரைப்படத் துறையினக்கோ திரைப்படம் தொடர்பான பழைய விவரம், கோப்பு ஏதும்வேண்டுமென்றால் சென்னை பீட்டர்ஸ் ரோட்டில் உள்ள இவரது வீட்டுக் கதவைத் தான் தட்டுவார்கள்.

அரும்பாடு பட்டு பல அரிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். பல படங்களில் பி.ஆர்.ஓ. ஆகவும் பணியாற்றியுள்ளார்.

1930ம் ஆண்டில் இருந்து தமிழக படங்கள் குறித்த தகவல்கள், படங்களை வைத்துள்ளார்.

சமீபத்தில் இவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார். தனது சேகரிப்புகளை அரசு எடுத்து பாதுகாக்கவேண்டும் எனவும், இதற்கு ஒரு தொகையை நிர்ணயித்து வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க ஒரு குழுவை அரசு நியமித்தது.

அக் குழுவினர் ஆனந்தனின் சேகரிப்புகளைப் பார்வையிட்டனர். இதில் பல தொகுப்புகள் மிக அரியவை என்பதால் உடனேஅவற்றை அரசே எடுத்து பாதுகாக்க வேண்டும் என பரிந்துரைத்தனர். இதற்காக தமிழ் திரை உலக வரலாற்றுக் காட்சியகத்தைஅமைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட அரசு பிலிம் நியூஸ் ஆனந்தனின் படைப்புகளை அரசுடமையாக்குவதாக அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட50 ஆண்டுகளாக பல சிரமங்களுக்கு இடையே இத்தனை தகவல்களையும் சேகரித்து அதை பாதுகாத்தும் வந்த பிலிம் நியூஸ்ஆனந்தனுக்கு ரூ. 10 லட்சத்தை ஈடாகத் தந்துள்ளது அரசு.

முதல்வர் ஜெயலலிதா இன்று இதற்கான காசோலையை ஆனந்தனிடம் வழங்கினார்.

மேலும் ஆனந்தன் எழுதியுள்ள தமிழ் திரையுலக வரலாறு குறித்த புத்தகத்தை வெளியிடவும் அச்சிடவும் ரூ. 5 லட்சம் தரவும்உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.

கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil