»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கல் தினத்தையொட்டி கமல், விஜய்காந்த், விஜய், சத்யராஜ் ஆகியோர் நடித்த 6 புதிய படங்கள் நாளை ரிலீஸ் ஆகின்றன.

அன்பே சிவம்:

கமல்ஹாசன்- சுந்தர்.சி ஆகியோர் கூட்டு சேர்ந்துள்ள முதல் படம் இது. கமலுடன் மாதவன், கிரண் நடிப்பதும் இதுவே முதல் முறை.கமல் வழக்கம்போல் வித்தியாசமான மேக் அப்பில் மிரட்டியுள்ளார்.

கதை கமலுடையது தான். வசனம் ஆனந்த விகடன் மதன். இதனால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3 பாடல்களை கமலே பாடியுள்ளார்.

சொக்கத் தங்கம்:

சுத்தமான தமிழ்ப் பெயரில் பாக்கியராஜ் எடுத்துள்ள இந்தப் படம் விஜய்காந்த் நடித்தது. இருவரும் கூட்டு சேர்ந்துள்ள முதல் படம்இது தான். ஹீரோயின் விஜய்காந்தின் மனம் கவர்ந்த செளந்தர்யாவே தான். கவுண்டமணி- செந்தில் ஜோடிக்கு ரீ எண்ட்ரி தரும்என்கிறார்கள். அந்த அளவுக்கு கலக்கி இருக்கிறார்களாம்.

உமா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ள இப் படத்தை மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வி. தான் தயாரித்துள்ளார்.

வசீகரா:

விஜய், ஸ்னேகா, காயத்ரி ஜெயராம் நடித்துள்ள இப் படத்தை செல்வபாரதி இயக்கியுள்ளார். பகவதி ஊத்திக் கொண்டதால் விஜய்இந்தப் படததை மிகவும் நம்பியுள்ளார்.

ராஜ்குமார் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன. படம் எப்படியோ தெரியவில்லை.

பாண்டியராஜன், மணிவண்ணன், சுகாசினியும் நடித்துள்ளனர்.

காலாட்படை:

முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு புதிய டைரக்டரான ரமேஷ் இயக்கியுள்ள படம் இது. டிவியில் நல்ல நாடகங்களைத் தந்துபுரட்சி ஏற்படுத்திய சோழா பொன்னுரங்கத்தின் தயாரிப்பு இது.

ஜெய், அருண், ஹூரோயினாக விது, ஆண்டனி, தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் அதிகமாகவேஎதிர்பார்க்கப்படுகிறது.

அன்னை காளிகாம்பாள்:

இராம. நாராயணனின் அடுத்த பக்தி பிளஸ் மிருகங்கள் படம் இது. பாபாவில் ரஜினி நடந்து வந்தால் கால் சூவில் இருந்துதீப்பொறி பறக்குமே, அதே மாதிரி இந்தப் படத்தில் யானை நடந்து வந்தால் நான்கு கால்களில் இருந்தும் தீப்பொறி பறக்கிறது.

கிராபிக்ஸை வைத்து யானை டான்ஸ், பாம்பு பாட்டு, வேப்பிலை டான்ஸ் என இராம. நாராயணன் வழக்கம் போலவேபெண்களை மையமாக வைத்து எடுத்துள்ள அல்ட்ரா சாமி படம் இது.

ரம்யா கிருஷ்ணன், குரங்கு, அனு பிரபாகர், யானை, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ராமச்சந்திரா:

இவரது மகனே ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். ஆனாலும் விடாமல் ஹீரோவாக சத்யராஜ் நடித்து வந்துள்ள அடுத்த போலீஸ்படம் ராமச்சந்திரா.

தனது குருவான எம்.ஜி.ஆர். நினைவுடன் தலைப்பை வைத்துள்ளார். ராஜ்கபூர் இயக்கியுள்ள படம். வால்டர் வெற்றிவேல் மாதிரிஎன்கிறார்கள். ஹீரோயின் விஜய்லட்சுமி.

கடும் போட்டியில் டிவிக்கள்:

பொங்கல் திருநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சேனல்களில்போட்டி போட்டுக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

சன் டிவியில் கலைஞரின் படைப்பில் உருவான பொங்கல் பாடல்கள், கமல்ஹாசனுடன் பேட்டி, சாலமன் பாப்பைய்யாபட்டிமன்றம், முத்து, பஞ்சதந்திரம் சினிமாக்கள் ஒளிபரப்பாக உள்ளன.

தூர்தர்ஷனின் பொதிகை தொலைக் காட்சியில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் கவியரங்கம் ஒளிபரப்பாக உள்ளது.சினிமா நடிகர்களுடன் பேட்டிகள் காட்டப்பட உள்ளன.

ராஜ் டிவியில் புதிய பாடல்கள், பிரியங்கா சோப்ராவுடன் பேட்டி, தென்கச்சி சுவாமிநாதன், வலம்புரிஜான் கலந்து கொள்ளும்பட்டிமன்றம், இசையமைப்பாளர் மணி சர்மாவுடன் பேட்டி என களை கட்டப் போகிறது.

ஜெயா டிவியில் பொங்கல் ரிலீஸ் படங்கள் சிறப்புக் காட்சி. நடிகை ரீமா சென்னுடன் பேட்டி, மேஜிக் ஷோக்கள் ஒளிபரப்பாகஉள்ளன.

விஜய் டிவியில் தேவாவுடன் பேட்டி, பாப்பைய்யாவின் கருத்தரங்கம், விவேக், ரதி ஆகியோருடன் பேட்டிகள் ஒளிபரப்பாகஉள்ளன.

நாளை மறுதினமும் ஏகப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை டிவிக்கள் ஒளிபரப்புகின்றன. சன் டிவியில் சேது திரைப்பட ஒளிபரப்பாகஉள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil