Just In
- 1 hr ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 2 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 2 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 4 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- News
4 தமிழக மீனவர்கள் படுகொலை விவகாரம்... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்..!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுத்தமா கன்டன்ட் இல்லை போல.. பாலா பர்த்டே வீடியோலாம் போட்டு ஒப்பேற்றும் பிக் பாஸ்!
சென்னை: 3வது புரமோவில் இருந்த பாலாஜி முருகதாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கடா என கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, இன்னைக்கு அதைப் போட்டு கடுப்பேற்றி உள்ளனர்.
தொடர்ந்து புரமோவுக்கும் ஷோவுக்கும் சம்பந்தமில்லாமல் ஆக்கிவிட்டது பிக் பாஸ் டீம்.
முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மேளம் வாசிக்கிற மாதிரி, பாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இப்போ போட்டு இன்றைய ஷோவை ஒப்பேற்றி விட்டனர்.
உன் பாயிண்ட் நல்லால.. எடுத்துக்குக்க முடியாது.. மோசமான பாடி லாங்குவேஜில் சனமை வெறுப்பேற்றிய பாலாஜி!

25 வயசு
24 வயது நிரம்பிய இளைஞராக பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டின் 59வது நாளில் தனது 25வது பிறந்தநாளை கொண்டாடினார். முதல் நாளே பாலாவின் பிறந்தநாள் புரமோ வெளியான நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் அந்த காட்சிகளை எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள் ரொம்பவே ஏமாந்து போனார்கள்.

சண்டைக்கு பிறகு சந்தோஷம்
சனம் ஷெட்டிக்கும், பாலாவுக்கும் இடையே வரிசையில் நிற்பதில் பயங்கர சண்டை நடந்தது. அந்த தேவையில்லாத அணிக்காக, பாலா தன்னைத் தானே செருப்பை கழட்டி அடித்துக் கொண்டார். அதன் பிறகு, பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வர ஹவுஸ்மேட்கள் அனைவரும் கேக் கட்டிங் செய்து பாலாவை வாழ்த்தினர்.

ஷிவானிக்கு ஃபர்ஸ்ட் கேக்
பிக் பாஸ் வீட்டில் தனக்கு ரொம்ப பிடித்தவரான ஷிவானி நாராயணனுக்கு ஃபர்ஸ்ட் கேக்கை பாலா ஊட்டி விட்டார். தொடர்ந்து, அர்ச்சனா, ரமேஷ், ரியோ, ஆரி என அனைவருக்கும் பாலா கேக் ஊட்டி விடவும், பாலாவுக்கு மற்ற ஹவுஸ்மேட்கள் கேக் ஊட்டிவிடவும் இருந்தனர். சனம் ஷெட்டி பக்கமே பாலா வரவில்லை.

திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்
யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா சாரி.. ஆனால், திரும்ப திரும்ப ஹர்ட் பண்ணுவேன்.. ஏன்னா கேம் அந்த மாதிரி என பாலாஜி முருகதாஸ் மறுபடியும் தனது ஆட்டத்தை பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு நடுவிலும் பேசி தான் இப்படித்தான் என்பதை நிரூபித்தார். பாலாவை பிடிக்காதவர்களும் பிறந்தநாள் அன்றே அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து விட்டனர்.

வெட்கமே இல்லாமல்
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், பாலாவின் பிறந்தநாள் கேக்கை தானாகவே போய் சனம் ஷெட்டி எடுத்து சாப்பிட்டதை பார்த்த பாலாவின் ரசிகர்கள் சனம் ஷெட்டியை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு முன்பாக பாலாவை பேசியே சனம் ஹர்ட் பண்ணதுக்காகவும் அவரை திட்டி வருகின்றனர்.

சுத்தமா கன்டன்ட்டே இல்லை
போன வாரம் தான் நிவர் புயல் காரணமாக ஏற்கனவே எடுத்து வைத்த சீன்களை வைத்தே ஒப்பேற்றினார்கள். இந்த வாரம் என்ன ஆச்சு பிக் பாஸுக்கு, சுத்தமா கன்டன்ட்டே இல்லாமல், பழைய புரமோ சீன்களை மட்டுமே தூசி தட்டிப் போட்டு வருகிறார்கள். முக்கியமான காட்சிகளை போடாமல் அப்படியே கட் செய்கிறார்கள். ரசிகர்களை மதிப்பதில்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ளன.