»   »  இது தான் உங்க 'டக்கா' மிஸ்டர் தனுஷ்?

இது தான் உங்க 'டக்கா' மிஸ்டர் தனுஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊர், உலகம் எல்லாம் வாழ்த்திய பிறகு கடைசி ஆளாக மனைவிக்கு பெயருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ்.

தனுஷை போன்றே அவரது மனைவி ஐஸ்வர்யாவும் பன்முகத் திறமை கொண்டவர். இயக்குனர், தயாரிப்பாளர், பரதநாட்டிய கலைஞர் என்று அசத்தி வரும் ஐஸ்வர்யா தனது வாழ்க்கை வரலாற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

Finally, Dhanush appreciates wife Aishwarya

புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. விழாவில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார், நடிகர் அமிதாப் பச்சனின் மகள் ஸ்வேதா, நடிகை சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யாவின் புத்தகத்தை படித்த பிரபலங்கள், சாதாரண மக்கள் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் தனுஷ் மட்டும் ஐஸ்வர்யாவின் புதிய அவதாரத்தை கண்டுகொள்ளவில்லை.

இதை கவனித்த பலரும் தனுஷை விமர்சிக்கத் துவங்கினர். அதன் பிறகு அவர் இன்று ட்விட்டரில் லேட்டாக வாழ்த்தியுள்ளார். அவரது ட்வீட்,

ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் புத்தக அறிமுகம் மற்றும் வெற்றிக்கு வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என தெரிவித்துள்ளார்.

English summary
Dhanush has finally appreciated wife Aishwarya on her new avatar as writer. He tweeted that, 'Congrats on the launch and success of your book "standing on an apple box" ash_r_dhanush .. god bless'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil