»   »  நீங்க சூப்பர் ஸ்டார் தான், தெரியாமல் சொல்லிட்டேன்: மன்னிப்பு கேட்ட 'சேட்டை' நடிகர்

நீங்க சூப்பர் ஸ்டார் தான், தெரியாமல் சொல்லிட்டேன்: மன்னிப்பு கேட்ட 'சேட்டை' நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மோகன்லாலை சோட்டா பீம் என்று கூறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார் பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே.

பாலிவுட் நடிகரும், விமர்சகருமான கேஆர்கே எனப்படும் கமால் ஆர் கான் சும்மா இல்லாமல் மகாபாரதக் கதையில் நடிக்கும் மோகன்லால் சோட்டா பீம் மாதிரி இருப்பதாக ட்வீட்டினார்.

அவ்வளவு தான் மலையாள ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர்.

திட்டு

திட்டு

கேஆர்கேவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார்கள். மீம்ஸ் மேல் மீம்ஸ் போட்டார்கள். மொழி புரியாவிட்டாலும் தன்னை தான் வசை பாடுகிறார்கள் என்பது கேஆர்கேவுக்கு புரிந்தது. சிலர் ஆங்கிலத்தில் திட்டினார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

இந்த மாலையாளிகள் ஏன் என்னை இப்படி விடாமல் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி என்ன செய்தேன் என்று ஒன்றுமே தெரியாதது போன்று கேட்டார் கேஆர்கே.

மன்னிப்பு

மன்னிப்பு

கேஆர்கேவும் எதுவுமே நடக்காதது போல் இருந்தாலும் மலையாள ரசிகர்கள் அவரை வசை பாடுவதை நிறுத்துவதாக இல்லை. அவராலேயே தாங்க முடியாமல் மன்னிப்பு கேட்டுவிட்டார்.

மோகன்லால்

மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டு கேஆர்கே ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை சோட்டா பீம் என்று கூறியதற்கு சாரி மோகன்லால் சார். எனக்கு உங்களை பற்றி அவ்வளவாக தெரியாமல் இருந்தது. நீங்கள் மலையாள சூப்பர் ஸ்டார் என்பதை நான் தற்போது தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

English summary
KRK finally apologized on twitter saying, 'Sir Mohanlal sorry to call you #ChotaBheem Coz I didn't know much about you. But now I know that you are a super star of Malayalam films.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil