»   »  2ம் தேதி 'தல 57' தலைப்பு வெளியீடு: இப்பவாவது தோணுச்சே சிவாவுக்கு

2ம் தேதி 'தல 57' தலைப்பு வெளியீடு: இப்பவாவது தோணுச்சே சிவாவுக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 2ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத் மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது.

இருப்பினும் இதுவரை ஃபர்ஸ்ட் லுக்கை கூட சிவா வெளியிடவில்லை. வெளிநாட்டில் படப்பிடிப்பு நடந்தபோது அங்குள்ள ஊடகம் ஒன்று அஜீத்தை புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டதால் கெட்டப்பை பார்க்க முடிந்தது.

Finally Siva decides to announce Thala 57 title?

தலைப்பை வெளியிடாமல் இழுத்தடிப்பது தான் இந்த சிவாவிடம் உள்ள கெட்டப் பழக்கம். படத்திற்கு வதம் அல்லது விவேகம் என்று பெயர் வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

படத் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வரும் 2ம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அப்படி அன்று வெளியிடாவிட்டால் அவற்றை என்று வெளியிடுவார்கள் என்று அறிவிப்பார்களாம்.

தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் தெரியாமல் தல ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள்.

English summary
Buzz is that Siva will reveal the title and first look of Ajith starrer Thala 57 on february 2nd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil