Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியன் 2வை தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் மேலும் ஒரு பயங்கர தீ விபத்து.. அதிர்ச்சியில் கோலிவுட்!
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்டு பயங்கர தீ விபத்து திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது. சில படங்கள் சிறிய பட்ஜெட்டில் ஓரிரு கோடிகளில் எடுக்கப்படுகின்றன.
சில படங்கள் உச்ச நட்சத்திரங்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் படமாக்கப்படுகிறது. அப்படி தயாரிக்கப்படும் படங்களுக்கு என பிரமாண்டா செட்டுகள் போடப்படுகின்றன. இதில் விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது.

கிரேனில் லைட்டு
கடந்த 19ஆம் தேதி சென்னை நசரத் பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இரவை பகலாக்கி காட்சிகள் எடுக்கப்பட்டன. இதற்காக ராட்சத கிரேன்களில் கொத்து கொத்தாக லைட்டுகள் பயன்படுத்தப்பட்டன. அப்போது லைட்டின் வெயிட் தாங்க முடியாமல் கிரேன் சரிந்து விழுந்தது.

மேலும் ஒரு விபத்து
இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு தரப்பை சேர்ந்த மது, சந்திரன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியே இன்னும் ஆறாத நிலையில் தமிழ் சினிமாவில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தளம்
அதாவது, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் அரண்மனை 3 படத்திற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் முதல் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் படப்பிடிப்பு தளத்தின் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.

2 வாகனங்கள்
தகவலறிந்து 2 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு தீயணைப்பு வாகனங்களில் கொண்டு வந்த தண்ணீர் தீயை அணைக்க போதாமல் போனதால் மெட்ரோ லாரிகளிலும் தண்ணீர் கொண்டுவந்து தீ அணைக்கப்பட்டது.

கோலிவுட் அதிர்ச்சி
இன்று படப்பிடிப்பு நடக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல கோடிக்கு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரண்மனை படப்பிடிப்பு
ஏற்கனவே வெளியான அரண்மனை படத்தின் மற்ற பாகங்கள் பெரும் ஹிட்டடித்தது. இதனை தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி அரண்மனை 3 படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இந்தப்படத்தில் ஆர்யா, யோகிபாபு, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.