»   »  இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.

இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அந்த அலுவலகத்தில் இன்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.

Fire accident in Maniratnam's office

தீ விபத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிரத்னம் தற்போது கார்த்தி, அதிதி ராவ் ஹைதரியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் நடந்தபோது அலுவலகத்தில் மணிரத்னம் இருந்தாரா என்பது குறித்தும் தகவல் இல்லை.

English summary
Fire broke out in ace director Maniratnam's office in Abiramapuram, Chennai on monday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil