»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இசையமைப்பாளர் தேவா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

சென்னையில் உள்ள பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் திங்கள்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில்அங்குள்ள ஏ.சி.அறை முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது.

திங்கள்கிழமை காலை பிரசாத் படப்பிடிப்பு தளத்தில் காலை மின்சாரம் தடைப்பட்டது. பின் சிறிது நேரம் கழித்துமின்சாரம் வந்ததும் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இசையமைப்பிற்காக உள்ள கம்போசிங்அறையில் தீப்பிடித்தது.

தீ வேகமாக பரவி அந்த அறை முழுவதும் புகை சூழ்ந்தது. அப்போது இசையமைப்பாளர் தேவா தனதுகுழுவினருடன் அங்கு அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார்.

தீ பிடித்து அறை முழுதும் புகை பரவிய போதிலும் தேவாவும் அவரது குழுவினரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இதனால் தீ வேறு இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ 10,000 மதிப்புள்ள இசைக்கருவிகள் சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து தேவா கூறுகையில், இந்த விபத்தில் நானும் என் குழுவினரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினோம். இசைக் கருவிகளையும் சேதமடையாமல் காப்பாற்றி விட்டோம். நாங்கள் வெளிவந்த பின் எங்கள்கண்முன் அந்த அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது என்றார்.

யு.என்.ஐ.

Read more about: chennai, cinema, deva, tamilnadu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil