»   »  'ஜிவி பிரகாஷ்... உங்களுக்கு ஏன் இந்த திரிகொளுத்தும் வேலை?'- அஜீத்- விஜய் ரசிகர்கள் கோபம்

'ஜிவி பிரகாஷ்... உங்களுக்கு ஏன் இந்த திரிகொளுத்தும் வேலை?'- அஜீத்- விஜய் ரசிகர்கள் கோபம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்க நடிகரை தண்ணி, தம் இல்லாமல் நடிக்கச் சொல்லுங்கள் என்று கூறி, விஜய்-அஜீத் ரசிகர்கள் சண்டைக்கு நடிகர் ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் திரி கொளுத்திப் போட்டுவிட்டார். பின்னர் தனது அனைத்து ட்விட்டர் பதிவுகளையும் அழித்துவிட்டார். இது அஜீத் - விஜய் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ், தற்போது படங்களில் நடித்து நாயகனாகவும் வலம் வருகிறார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ், நேற்று ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விதம் அஜீத் ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகும் படங்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றன. இருந்தாலும் இவற்றைப் பற்றி கவலைப்படாமல் எல்லோரும் தன்னைப் பற்றியே பேச வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு எதையாவது பரபரப்பு கிளப்பி வருகிறார். முன்பு ரஜினி ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்தார். இப்போது அஜீத் - விஜய் ரசிகர்களிடம் வறுபடுகிறார். நேற்று ரசிகர் ஒருவர் நீங்கள் இளைஞர்களுக்கு தவறான உதாரணம் என்று கூறியிருந்தார்.

தண்ணி, தம்

தண்ணி, தம்

இதற்கு ஜி.வி.பிரகாஷ் முதலில் உங்கள் நடிகரை தண்ணி, தம், பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இல்லாமல் நடிக்க சொல்லுங்கள் என்று பதிலளிக்க, இதற்கு விஜய் ரசிகர்கள் ஓடி வந்து ஆதரவளித்தனர். இதனால் ட்விட்டரில் ஒரு பெரிய யுத்தமே அஜீத்-விஜய் ரசிகர்களுக்கிடையே தொடங்கியது.

அஜீத் ரசிகர்கள்

அஜீத் ரசிகர்கள்

கேள்வி கேட்டவர் அஜீத் ரசிகர் என்பதால் அஜீத்தை எப்படி நீங்கள் இப்படி சொல்லலாம்? என்று அவரது ரசிகர்கள் கொந்தளிக்க, அதற்கு ஜி.வி.பிரகாஷ் நான் எப்போது அப்படி சொன்னேன் என்று பின்வாங்கினார். மேலும் உங்களால் தான் உங்கள் நடிகருக்கு கெட்ட பெயர் எனக்கு அஜீத் சாரை மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

ஜி.வி.பிரகாஷ், அஜீத்தைத் தான் அப்படி கூறினார் என்று விஜய் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு அவரை வாழ்த்தினர். பதிலுக்கு அஜீத் ரசிகர்கள் ஜி.வி.பிரகாஷுக்கு ஆண்டி டேக் போட்டு நீங்கள் முதலில் குடிக்காமல் நடியுங்கள் என்று கிண்டலடித்தனர். இவர்களின் சண்டையால் ட்விட்டரே போர்க்களமாக மாறியது. மேலும் தனக்கு எதிராகப் பதிவிட்டவர்கள் அத்தனைப் பேரையும் ப்ளாக் பண்ணி வருகிறார் ஜிவி.

நீக்கம்

நீக்கம்

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தற்போது தான் போட்ட அனைத்து ட்வீட்களையும் நீக்கி இருக்கிறார். இதனையறிந்த பலரும் ஒரு ரசிகரின் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் இப்படி இருவரின் ரசிகர்களையும் மோதிக்கொள்ள வைத்து விட்டாரே? என்று கடுப்பாகியுள்ளனர்.

விஜய்

விஜய்

சமீப காலமாக விஜய்க்கு ஆதரவாக ஜி.வி.பிரகாஷ் கருத்து சொல்ல அது மிகப்பெரிய சர்ச்சைகளில் வந்து நிற்கிறது. எனினும் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்பி பின்னர் அதை அழித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

English summary
G.V.Prakash Insult Ajith? now Ajith and Vijay fans Clash in Social Network Sites.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil