வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார்.. புது படத்தில் கிடைத்த பட்டம்.. கலக்கலாய் வெளியான போஸ்டர்!
சென்னை: நடிகை வனிதா பிக்கப் டிராப் படத்தின் மூலம் வைரல் ஸ்டார் வனிதா விஜயகுமார் என அறிமுகமாகிறார்.
நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு நடிகை வனிதாவுக்கு சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பும் சினிமாவில் மீண்டும் நடிக்க வாய்ப்பும் குவிந்து வருகிறது.
குக் வித் கோமாளி, கலக்கப்போவது யார்? பிக்பாஸ் ஜோடிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
அண்மையில் பிக்பாஸ் ஜோடிகளில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விலகுவதாக அறிவித்தார்.

பவர் ஸ்டாருடன்
வனிதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகர் பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்தார் வனிதா.

பிக்கப் ட்ராப்
அந்த போட்டோ பெரும் வைரலானது. இந்நிலையில் அந்த போட்டோவுக்கு பின்னணியில் உள்ள தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை வனிதா பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
இந்தப் படத்தை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனே இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

வைரல் ஸ்டார் வனிதா
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் வனிதாவின் பெயர் வைரல் ஸ்டார் வனிதா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வனிதா முதல் முறையாக வைரல் ஸ்டார் என்ற பட்டத்துடன் சினிமாவில் அறிமுகமாகிறார்.

பாக்ஸிங் க்ளவுஸில் பவர் ஸ்டார்
இந்த போஸ்டரில் வனிதா திருமண கோலத்தில் பைக் ஓட்ட பின்னால் பாக்ஸிங் க்ளவுஸுடன் அமர்ந்துள்ளார் பவர் ஸ்டார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷார்ட்ஸில் பவர் ஸ்டார்
பவர் ஸ்டாருடனான மற்றொரு போட்டோவையும் வனிதா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதில் பவர் ஸ்டார் ஷார்ட்ஸ், டீ ஷர்ட் மற்றும் கூலர்ஸ் அணிந்து பைக் ஓட்டுகிறார்.

கலக்கல் லுக்கில் வனிதா
அவருக்கு பின்னால் கறுப்பு கவுன் கறுப்பு ஹேட் அணிந்து கலக்கலாக உள்ளார் வனிதா விஜயகுமார். வனிதாவும் பவர் ஸ்டாரும் இணைந்துள்ள போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











