»   »  மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!

மீண்டும் வேட்டியை மடித்துக் கட்டி மீசை முறுக்கினார்... ‘கொம்பன்’ கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பருத்திவீரனைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் கார்த்தி கிராமத்து வேடத்தில் நடித்துள்ள படம் கொம்பன். பொங்கல் பண்டிகை யொட்டி நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டிரைலர் வெளியிடப் பட்டது.

தன் முதல் படமான பருத்தி வீரனில் வேட்டியை மடித்துக் கட்டி, மீசையை முறுக்கி ‘என்ன மாமா... சவுக்கியமா...?' என கிராமத்து பேச்சில் அசத்தலாக களமிறங்கினார் நடிகர் கார்த்தி. பருத்திவீரனைத் தொடர்ந்து கார்த்திக்கு கிராமத்து படங்கள் அமையவில்லை. தொடர்ந்து நகரத்து இளைஞராகவே ஸ்டைல் காட்டி வந்தார்.

எனவே, மீண்டும் கார்த்தியை கிராமத்து லுக்கில் பார்க்க அவரது ரசிகர்கள் ரொம்பவே ஆசைப்பட, அதற்குத் தகுந்தாற்போல் குட்டிப்புலி பட இயக்குநர் முத்தையாவின் கொம்பன் படத்தில் ஒப்பந்தமானார்.

பர்ஸ்ட் லுக்...

பர்ஸ்ட் லுக்...

பொங்கல் ரிலீசாக கொம்பன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், சிலப்பல காரணங்கள் அது தள்ளிப் போனது. ஆனபோதும், ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத படக்குழு நேற்று கொம்பன் பட பர்ஸ்ட் லுக் டிரைலரை வெளியிட்டது. அதில், பட்டாபட்டி தெரிய வேட்டியை மடித்துக் கட்டி, மீசையை முறுக்கி கர்ஜிக்கிறார் கார்த்தி.

 ஆடு வியாபாரம்...

ஆடு வியாபாரம்...

மெட்ராஸ் படத்தின் வெற்றியைத்தொடர்ந்து கார்த்தி கொம்பனாக களம் இறங்கி விட்டார். இப்படத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஆடு வியாராம் செய்யும் இளைஞனாக கார்த்தி நடிப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். அம்மாவாக கோவை சரளா நடிக்கிறார்.

லட்சுமிமேனன் ஜோடி...

லட்சுமிமேனன் ஜோடி...

இந்த படத்தின் கதை அப்பா இல்லாமல் வரும் பையன், அம்மா இல்லாமல் வளரும் பெண் இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதில் லட்சுமி மேனனின் அப்பாவாக நடிக்கும் ராஜ்கிரணை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறாராம்.

நகைச்சுவைக் காட்சிகள்..

நகைச்சுவைக் காட்சிகள்..

இதேபோல், பதிலுக்கு மாமியார் கோவைசரளாவையும் லட்சுமிமேனன் வம்புக்கு இழுப்பாராம். இப்படியாக இருவரும் அடிக்கடி இருபிறந்த வீட்டினரை திட்டுவதை நகைச்சுவையாக படமாக்கி இருக்கிறாராம் இயக்குனர் முத்தையா.

ஆக்ரோஷமான கார்த்தி...

ஆக்ரோஷமான கார்த்தி...

ஆனால், டிரைலரின் ஆரம்பக் காட்சிகளிலேயே ஆக்‌ஷன் ஆக்ரோஷம் காட்டுகிறார் கார்த்தி. எனவே, இது ஆக்‌ஷன் கலந்த குடும்பப் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

முதல்முறையாக ...

முதல்முறையாக ...

ஏற்கனவே, முத்தையா இயக்கிய குட்டிப்புலி படத்தில் சசிகுமார் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக கார்த்தி - லட்சுமிமேனன் ஜோடி சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The much-awaited trailer of Karthi's upcoming drama Komban was released on the occasion of Pongal. The film, directed by M Muthaiah has Karthi, Lakshmi Menon, Rajkiran, Thambi Ramaiah and Kovai Sarala playing pivotal roles.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil