»   »  விஷால், காஜால் அகர்வால் வெளியிட்ட வில் அம்பு

விஷால், காஜால் அகர்வால் வெளியிட்ட வில் அம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் ஒரு படத்தின் போஸ்டரைக்கூட பிரபல நடிகர்களை வைத்து வெளியிடுகின்றனர். இயக்குநர் சுசீந்திரனின் சொந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் தலைப்பு இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

படத்திற்கு ‘வில் அம்பு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் நடித்து வரும் நடிகர் விஷாலும் நடிகை காஜல் அகர்வாலும் வெளியிட்டனர்.

பாயும்புலி

பாயும்புலி

சுசீந்தரன் தற்போது விஷால், காஜல் அகர்வால் நடிக்கும் பாயும் புலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் சைலன்ட்டாக புதிய படம் ஒன்றையும் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்.

வில் அம்பு

வில் அம்பு

வில் அம்பு படத்தில் ‘வழக்கு எண் 18/9' படப்புகழ் ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண், ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

வில் அம்பு கதை

வில் அம்பு கதை

ஒரே ஏரியாவில் வசிக்கும் பணக்கார இளைஞன் ஒருவனுக்கும், மிடில் கிளாஸ் இளைஞன் ஒருவனுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களமாம். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.

சுசீந்திரன் தயாரிப்பில்

சுசீந்திரன் தயாரிப்பில்

ரமேஷ் சுப்ரமணியம் இதனை இயக்குகிறார். நவீன் இசையமைக்க மார்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டார் ஃபிலிம் லேன்ட், நல்லுசாமி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சுசீந்தின் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

English summary
The official title look of ‘VilAmbu’ was unrevealed by the gorgeous Kajal Aggarwal, and hero Vishal on the 6th of April 2015. Suseenthiran directs this movie with Arrora lending the music score.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil