»   »  புதுச்சேரிவாசிகளே ச்சியர்ஸ்... உங்களுக்கு முதல் மல்டிப்ளெக்ஸ் திறந்தாச்சு!

புதுச்சேரிவாசிகளே ச்சியர்ஸ்... உங்களுக்கு முதல் மல்டிப்ளெக்ஸ் திறந்தாச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரியில் முதல் முதலாக ஒரு மல்டிப்ளெக்ஸ் தியேட்டரைத் திறந்துள்ளது சத்யம் சினிமாஸ். இந்த மாலுக்கு தி சினிமா என்று பெயரிட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தனது திரையரங்குகளை விரிவுபடுத்தி வருகிறது சத்யம் சினிமாஸின் எஸ்பிஐ சினிமா.

First multiplex in Puthucherry

சென்னையில் சத்யம், எஸ்கேப், பேலஸோ, எஸ்2, எஸ்2 தியாகராஜா போன்ற மல்டிப்ளெக்ஸ்களை இயக்கி வரும் எஸ்பிஐ, கோவை, பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களில் தனது திரையரங்குகளைத் திறந்துள்ளது.

First multiplex in Puthucherry

புதுவையில் கடலூர் சாலையில் உள்ள புராவிடன்ஸ் மாலில் 5 திரைகள் கொண்ட அதிநவீன தி சினிமாவைத் திறந்துள்ளது எஸ்பிஐ சினிமா.

இந்தத் திரையரங்கை புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

"புதுவை சினிமா விரும்பிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை தி சினிமா தரும் என்று நம்புகிறோம். திரைகளின் தரம், ஒலித் துல்லியம், நல்ல உணவு என அனைத்துமே தரமாகக் கிடைக்கும். 4கே புரொஜக்ஷன் வசதி உள்ளது. 3டி வசதியும் உள்ளது," என்று தெரிவித்தார் எஸ்பிஐ சினிமாஸின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி.

English summary
Chennai’s favourite multiplex chain, SPI Cinemas, opens its doors to the city of Puducherry with the launch of a swanky 5 screen multiplex, 'The Cinema' at Providence Mall

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil