»   »  கிளம்பிட்டாங்கய்யா... நேற்று தொடங்கிய எந்திரன் 2-க்கு எதிராக ஆர்ப்பாட்ட அறிவிப்பு!

கிளம்பிட்டாங்கய்யா... நேற்று தொடங்கிய எந்திரன் 2-க்கு எதிராக ஆர்ப்பாட்ட அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டு, அதற்கான பிரஸ்மீட்டும் நேற்று நடந்து முடிந்தது.

இந்த நிகழ்வுகள் முடிந்த 24 மணி நேரத்துக்குள் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது.

First objection for Rajini's 2.0!

காரணம் என்ன?

இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த எமி ஜாக்ஸன் நாயகியாக நடிக்கிறாராம். எனவே அவரை உடனடியாகத் தூக்காவிட்டால், இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கும் அத்தனை இடங்களிலும் வந்து ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த வீரலட்சுமி என்பவர் கூறியுள்ளார்.

தமிழர் மண்ணில் பிழைப்புக்காக வந்த எமி ஜாக்ஸன் எப்படி தமிழரின் வீர விளையாட்டை தடை செய்ய ஆதரவு தெரிவிக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், இன்னும் மூன்று தினங்களுக்குள் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

2.0-க்கு இன்னும் எத்தனைப் பஞ்சாயத்து காத்திருக்கோ தெரியலையே!

English summary
A Tamil outfit has strongly opposed Rajini's latest 2.0 movie for casting Emi Jackson who is supporting ban on Jallikattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil