»   »  முதல்ல சண்டக்கோழி 2... அப்புறம் அல்லு அர்ஜூன் படம்... இது லிங்குசாமி ப்ளான்!

முதல்ல சண்டக்கோழி 2... அப்புறம் அல்லு அர்ஜூன் படம்... இது லிங்குசாமி ப்ளான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஞ்சான் படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் இரு புதுப் படங்களின் அறிவிப்பு வெளியானாலும், தொடங்கப்படவில்லை.

ஒரு படம் சண்டக்கோழி 2. விஷால் ஹீரோ. ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கான படப்பிடிப்புக்குப் போகவிருந்த நேரத்தில், படம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதுப் படத்தை இயக்கப் போகிறார் லிங்குசாமி என செய்தி வெளியானது.


First Sandakkozhi 2, next Allu Arjun project

ஆனால் அந்தப் படமும் பூஜையோடு நிற்கிறது. மீண்டும் சண்டக்கோழி 2 படம் குறித்த பேச்சுகள் கிளம்பின. இந்தப் படத்தை உறுதியாகச் செய்கிறோம் என விஷால் அறிவித்தார். அதை இப்போது லிங்குசாமியும் உறுதி செய்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த படத்தில் விஷாலுடன் மீண்டும் இணைந்து 'சண்டக்கோழி 2'-வை இயக்க உள்ளேன். அதன் பிறகு உடனடியாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்கப் போகிறேன்," என்றார்.


சண்டக்கோழி 2-க்கான திரைக்கதை முழுவதுமாக முடிந்து ஷூட்டிங் செல்லத் தயாராக உள்ளனர்.

English summary
Director Lingusamy has confirmed that he would direct Sandakkozhi 2 first and Allu Arjun project next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil