»   »  முதலில் சண்டக்கோழி... அடுத்து அல்லு அர்ஜூன் படம்! - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

முதலில் சண்டக்கோழி... அடுத்து அல்லு அர்ஜூன் படம்! - இயக்குநர் லிங்குசாமி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதலில் சண்டக்கோழி படத்தை முடித்துவிட்டு, வரும் 2017-ல் அல்லு அர்ஜூன் படத்தை இயக்குகிறேன் என்று இயக்குநர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக 10வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிவிப்புக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.


First Sandakozhi, next Allu Arjun - Lingusamy

இதில் நடிகர் அல்லு அர்ஜுன் , தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா , இயக்குநர் லிங்குசாமி , நடிகர் சிவகுமார் , நடிகர் அல்லு அர்ஜுனின் சகோதரர் அல்லு சிரிஷ் , எழுத்தாளர் கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "நான் அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளேன் என்று என்னுடைய கிராமத்தில் உள்ளவர்களிடம் சொன்னபோது அவர்களில் சிலர் என்னிடம், 'நாங்கள் அல்லு அர்ஜுனின் நடனத்திருக்கு மிகப்பெரிய ரசிகர்கள்' என்றனர்.


அவருக்கு தமிழிலிலும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் நான் அல்லு அர்ஜுனை வைத்து நான் தமிழில் இயக்கும் நேரடி தமிழ் படம் இருக்கும்.


இப்போது முதலில் சண்ட கோழி திரைப்படத்தைதான் இயக்கப் போகிறேன். அதன் பிறகுதான் அல்லு அர்ஜுன் படத்தைத் துவங்கவுள்ளேன்," என்றார்.

English summary
Director Lingusamy clears that he would first direct his Sandakozhi 2 and Allu Arjun movie next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil