»   »  தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக... விக்ரமுடன் இணையும் நயன்தாரா

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக... விக்ரமுடன் இணையும் நயன்தாரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரமுடன் இணைந்து முதன்முதலாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

10 என்றதுக்குள்ள படத்தைத் தொடர்ந்து விக்ரம் அடுத்ததாக அரிமாநம்பி புகழ் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

First Time Nayanthara Opposite Vikram

விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் தற்போது விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார் என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார். விக்ரம், நயன்தாராவைத் தொடர்ந்து பிந்து மாதவியும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பணியிலிருந்து ஐங்கரன் நிறுவனம் விலகிய நிலையில் தற்போது புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதை உறுதிசெய்த படக்குழுவினர் விரைவில் படத்தின் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிக, நடிகையர் பற்றிய விவரங்களை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமுடன், நயன்தாரா இணையும் முதல் படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After 10 Endrathukulla Vikram Team Up with Director Anand Shankar, in First Time Nayanthara Opposite to Vikram in this Film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil