twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிதையும் கூட்டுக் குடும்பங்கள்.. சீர்தூக்கி நிறுத்தும் கடைக்குட்டி சிங்கம்.. சபாஷ் பாண்டிராஜ்!

    கடைக்குட்டி சிங்கம் படத்தில் ஆணவக்கொலை, விவசாயம், ஆண்- பெண் நட்பு என பலவற்றைப் பற்றி விரிவாக பேசியுள்ளார் பாண்டிராஜ்.

    |

    சென்னை : பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல குடும்பப் படத்தை, குடும்பத்தோடு பார்க்கும் திருப்தியை தந்திருக்கிறது. இதற்காகவே பாண்டிராஜுக்கு முதலில் ஒரு லைக்ஸ் போடலாம்.

    அக்காப் பொண்ணுக்காக தாய்மாமன்கள் நடத்தும் பாசப்போராட்டத்தை அதிக விவசாயம், கொஞ்சம் ஆணவக் கொலை என சமுதாய மெசேஜில் தொட்டுக் கொடுத்திருக்கிறார் பாண்டிராஜ்.

    அவரின் மற்றப் படங்களில் இருந்து வேறுபட்டு, ஆரம்பத்திலேயே ரேக்ளா ரேஸ் காட்சிகளைப் பிரம்மாண்டமாகக் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.

    ஆபாசம் இல்லை:

    ஆபாசம் இல்லை:

    வழக்கமாக தமிழ் சினிமாவில் அத்தைப் பெண்கள் என்றாலே மாமா மீது விழுந்து, புரண்டு காதலிப்பார்கள். மாமா மனதில் இடம் பிடிக்க, ஆபாசமாக நடந்து கொள்வார்கள். ஆனால், கடைக்குட்டி சிங்கத்தில் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா என மூன்று ஹீரோயின்கள். ஆனால் ‘மாமா, மாமா' என பாசத்தைப் பொழிகிறார்களே தவிர, ஆபாசம் இல்லாத அவர்களின் கதாபாத்திர அமைப்பு மனதிற்கு நிறைவைத் தருகிறது.

    வசனங்கள் சூப்பர்:

    வசனங்கள் சூப்பர்:

    போகிற போக்கில் ஆணவக் கொலைகளுக்கு வசனங்கள் மூலம் கொட்டு வைத்திருப்பது சூப்பர். ‘எங்க பொண்ணுங்கள காலேஜ் அனுப்புறதே, கூட படிக்கிற பசங்கள நம்பித்தான்' என்பது போன்ற வசனங்கள் யதார்த்தம். ஆண்- பெண் நட்பு, விவசாயம், குடும்ப உறவுகள் பற்றிய பல வசனங்கள் கைதட்டல்களைப் பரிசாகப் பெறுகின்றன.

    வாவ் யுக்தி :

    வாவ் யுக்தி :

    நிச்சயம் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும், ஒன்றல்ல பல காட்சிகளில் தங்களின் சொந்த வாழ்க்கையைத் தொடர்புப் படுத்திப் பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை சபாஷ். காதல், அதற்காகப் போராடும் நாயகன் என்ற கருவை, விவசாயக் களத்தில், ஆணவக் கொலைகள் குறித்துப் பேசியிருக்கும் பாண்டிராஜின் யுக்தி வாவ். கசப்பு மருந்தை இனிப்பில் தோய்த்துக் கொடுக்கும் ரகம்.

    கார்த்தியின் நடிப்பு:

    கார்த்தியின் நடிப்பு:

    கிராமத்துக் கதை என்பதால் பருத்திவீரன் வெளியில் வந்து விடுவாரோ எனப் பயந்து படத்தைப் பார்த்தால், வித்தியாசமான கார்த்தி திரையில் தோன்றி மிரள வைக்கிறார். நிஜ விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கார்த்தி கண்ணுக்குத் தெரிவதே இல்லை, நிஜ விவசாயி ஒருவர் நம் கண் முன்னே நின்று வார்த்தைகளால் நம்மை அறைவது போல் வசனங்கள் உள்ளது படத்தின் பிளஸ்.

    நல்ல படம்:

    நல்ல படம்:

    மொத்தத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் வகையில் ஆபாசமில்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத நல்ல குடும்பப் படத்தைத் தந்திருக்கிறார் பாண்டிராஜ். தைரியமாகக் குடும்பத்தோடு சென்று தியேட்டரில் நிம்மதியாக படம் பார்க்கலாம். நிச்சயம் படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.

    English summary
    Karthi's Kadaikutty Singam, directed by Pandiraj is a family drama, which speaks the importance of agriculture and farmers.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X