»   »  பிளாஷ்பேக் 2015: டோலிவுட்டின் ஆ, ஓ, அப்படியா, ஓமைகாட் தருணங்கள்

பிளாஷ்பேக் 2015: டோலிவுட்டின் ஆ, ஓ, அப்படியா, ஓமைகாட் தருணங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 2015ம் ஆண்டில் தெலுங்கு திரை உலகில் அறிமுகமான நாகர்ஜுனா, அமலா தம்பதியின் மகன் அகிலின் படம் ஊத்திக் கொண்டது.

2015ம் ஆண்டில் தெலுங்கு திரையுலகில் நட்சத்திரங்களிடேயே சண்டை, பெரிய வீட்டுப் பிள்ளைகளின் சினிமா பிரவேசம், சர்ச்சைகள், திருமணம் நின்றது, காதல் முறிவு என்று பல விஷயங்கள் நடந்துள்ளது.

2015ம் ஆண்டு நிறைவடைய உள்ள நேரத்தில் தெலுங்கு ரசிகர்களை கவலை அடைய, சிரிக்க வைத்த, முகம் சுளிக்க வைத்த சில சம்பவங்கள் இதோ,

அகில்

அகில்

நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் நடிகராக அறிமுகமானார். அவரின் பெயரிலேயே வெளியான படத்தின் டீஸரை சல்மான் கான் வெளியாட்டார். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான படம் படுத்துக் கொண்டது.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

தெலுங்கு திரை உலகம் ஆணாதிக்கம் மிக்கது. அங்கு நடிகைகளுக்கு மதிப்பே இல்லை. நான் படாதபாடு பட்டது தெலுங்கு திரையுலகில் தான். இனி நான் தெலுங்கு படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினார் ராதிகா ஆப்தே.

சமந்தா-சித்தார்த்

சமந்தா-சித்தார்த்

காதலர்களாக வலம் வந்த சித்தார்த் மற்றும் சமந்தா பிரிந்தனர். சமந்தா படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டி வந்தது பிடிக்காமல் இருந்தார் சித்தார்த். சமந்தாவின் ஓவர் கவர்ச்சி தான் அவரின் காதலுக்கு வேட்டு வைத்தது என்று கூறப்பட்டது.

அலி

அலி

தெலுங்கு காமெடி நடிகர் அலி சைஸ் ஜீரோ இசை வெளியீட்டு விழாவில் அனுஷ்காவின் தொடை மிகவும் அழகானது, கவர்ச்சியானது, பில்லா படத்தில் அவரின் தொடையை பார்த்து ரசிகனாகிவிட்டேன் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

த்ரிஷா

த்ரிஷா

தெலுங்கு நடிகர் ராணாவை பிரிந்த த்ரிஷாவுக்கு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரும், சினிமா தயாரிப்பாளருமான வருண் மணியனுடன் நிச்சயம் நடந்தது. ஆனால் அவர்களின் திருமணம் நிச்சயத்தோடு நின்றுவிட்டது.

சார்மி

சார்மி

நடிகை சார்மியும், தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகந்நாத்தும் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவர்கள் தாங்கள் வெறும் நல்ல நண்பர்களே என்றனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சார்மி பேசுகையில் பூரிக்கு என் இடுப்பு என்றால் மிகவும் பிடிக்கும் என்றார்.

ஆர்த்தி அகர்வால்

ஆர்த்தி அகர்வால்

நடிகை ஆர்த்தி அகர்வால் அமெரிக்காவில் உடல் எடையை குறைக்கும் சிகிச்சை பெற்றபோது மாரடைப்பால் மரணம் அடைந்தார். தயாரிப்பாளர்கள் ராமநாயுடு, வி.பி. ராஜேந்திர பிரசாத், எடிடா நாகேஸ்வர ராவ், வசனகர்த்தா கணேஷ் பட்ரோ ஆகியோரின் இழப்பு தெலுங்கு திரை உலகினரை கவலையில் ஆழ்த்தியது.

English summary
As the year 2015 is nearing its end, above are the Oh, ouch, OMG moments of Tollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil