»   »  பிளாஷ்பேக் 2016: பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்

பிளாஷ்பேக் 2016: பாலிவுட்டை அதிர வைத்த சீனியர்களின் விவாகரத்துகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 2016ம் ஆண்டில் நடிகர் பர்ஹான் அக்தர், அர்பாஸ் கான் உள்ளிட்ட சிலர் தங்களின் மனைவியை பிரிந்துவிட்டனர்.

2016ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. பாலிவுட் இந்த ஆண்டு சில விவாகரத்து சம்பவங்களை பார்த்துள்ளது. நடிகர் பர்ஹான் அக்தர், நடிகர் அர்பாஸ் கான் உள்ளிட்டோர் மனைவியை பிரிந்து வாழ்கிறார்கள்.

இந்த ஆண்டில் பாலிவுட்டை அதிர வைத்த பிரிவுகள் இது தான்,

பர்ஹான் அக்தர்

பர்ஹான் அக்தர்

நடிகர் பர்ஹான் அக்தரும் அவரது மனைவி அதுனா பபானியும் திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து பிரிந்துள்ளனர். அவர்களுக்கு அகிரா, ஷகியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் பிரிந்ததற்கான காரணம் தெரியவில்லை.

அர்பாஸ் கான்

அர்பாஸ் கான்

சல்மானின் கானின் தம்பி அர்பாஸ் கானை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் நடிகை மலாய்க்கா அரோரா கான். அவர்களுக்கு அர்ஹான்(14) என்ற மகன் உள்ளார். அர்பாஸ், மலாய்க்காவுக்கு 1997ம் ஆண்டு திருமணம் நடந்தது.

புல்கிட் சாம்ராட்

புல்கிட் சாம்ராட்

நடிகர் புல்கிட் சாம்ராட் தனது மனைவி ஸ்வேதா ரோஹிராவை பிரிந்தார். திருமணமான இரண்டு ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர். சாம்ராட்டுக்கும் நடிகை யாமி கவுதமுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பே விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

ஹிமேஷ் ரேஷ்மய்யா

ஹிமேஷ் ரேஷ்மய்யா

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிமேஷ் ரேஷ்மய்யாவும், அவரது மனைவி கோமலும் திருமணமாகி இருபது ஆண்டுகள் கழித்து பிரிந்துள்ளனர். ஹிமேஷுக்கு ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் இந்த பிரிவு என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

English summary
For years, the world of showbiz has set popular benchmarks for love and romance. But away from the reel, real life love stories went sour for multiple celebrity couples across the Bollywood circuit in 2016, which also interestingly brought in Hindi cinema's very own 'Breakup song'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil