»   »  ஜல்லிக்கட்டு, சுசி லீக்ஸ், மெர்சல் பிரச்சனை, பிக் பாஸ், லட்சுமி: அடேங்கப்பா 2017ல் எம்புட்டு சர்ச்சை

ஜல்லிக்கட்டு, சுசி லீக்ஸ், மெர்சல் பிரச்சனை, பிக் பாஸ், லட்சுமி: அடேங்கப்பா 2017ல் எம்புட்டு சர்ச்சை

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஜல்லிக்கட்டு, சுசி லீக்ஸ், மெர்சல் பிரச்சனை, பிக் பாஸ், லட்சுமி - சர்ச்சைகளின் ஆண்டா 2017 ?- வீடியோ

சென்னை: 2017ம் ஆண்டு திரையுலகினருக்கு சர்ச்சைகள் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது.

2017ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு திரையுலகம் சந்தித்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். ஜனவரி மாதம் துவங்கியபோதே சர்ச்சையும் கிளம்பிவிட்டது.

ஜனவரி மாதம் சிக்கியது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தான்.

விஷால்

விஷால்

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர்கள் புரட்சி செய்தபோது விஷால் பிரச்சனையில் சிக்கினார். விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார் என்று சர்ச்சை கிளம்பியது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்ற விஷாலின் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை. இதையடுத்து அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட ஆர்யாவையும் நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்தார்கள். பீட்டா ஆதரவாளரான த்ரிஷாவுக்கும் டோஸ் விழுந்தது.

தனுஷ்

தனுஷ்

நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ் ஆட்கள் தாக்கியதால் காயம் அடைந்த பாடகி சுசித்ரா தனது கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். அதன் பிறகு திரையுலக பிரபலங்கள் சிலரின் கசமுசா புகைப்படங்களையும் வெளியிட்டார்.

ஹேக்

ஹேக்

தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை வெளியிடுவதாக சுசித்ரா கூறினார். பின்னர் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி பின் வாங்கிவிட்டார். அவருக்கு மனதளவில் பிரச்சனை இருப்பதாக அவரின் கணவர் தெரிவித்தார். இதற்கிடையே சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஆளாளுக்கு ட்விட்டரில் கணக்கு துவங்கி பிரபலங்களின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டனர்.

விஜய்

விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு குறித்த வசனங்கள் இருந்ததால் பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச். ராஜா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் கொடுத்து படத்தை ஹிட்டாக்கிவிட்டார்கள். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு தயாரிப்பாளரை வலியுறுத்தவும் செய்தார்கள்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திக்காரர்கள் நடத்தலாம் ஆனால் இது தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பலரும் சமூக வலைதளங்களில் கொந்தளித்தனர். நிகழ்ச்சியை நடத்திய கமல் ஹாஸனையும் விமர்சித்தார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்தவர்கள் கூட பின்னர் விரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். விஜய் டிவியும் பிக் பாஸை வைத்து டிஆர்பியை ஏற்றியது. பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஓவியாவுக்கு தான் ஜாக்பாட் அடித்தது. அந்த அளவுக்கு ரசிகர்கள் கிடைத்தார்கள்.

குறும்படம்

குறும்படம்

லட்சுமி ப்ரியா நடித்த லட்சுமி குறும்படம் ஏகத்திற்கும் பிரபலமாகி சர்ச்சையில் சிக்கியது. ஆண் தவறு செய்கிறான் என்றால் பதிலுக்கு பெண்ணும் அதையே செய்ய வேண்டுமா என்ற விவாதம் எழுந்தது. லட்சுமி ப்ரியா நடித்துள்ளார் என்பதை மறந்து அவர் நிஜமாகவே செய்தது போன்று பலர் திட்டித் தீர்த்தனர் நெட்டிசன்ஸ்.

நீயா நானா

நீயா நானா

தமிழக பெண்கள் அழகா, கேரள பெண்கள் அழகா என்ற தலைப்பில் நீயா நானா நிகழ்ச்சியை நடத்த ப்ரொமோ வீடியோ வெளியிட்டனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

ட்விட்டரில் மோதல்

ட்விட்டரில் மோதல்

நகைச்சுவை நடிகர்களான ஆர்.ஜே. பாலாஜியும், சதீஷும் ட்விட்டரில் மோதிக் கொண்டனர். ஆர்.ஜே. பாலாஜி ஆரம்பித்து வைக்க சதீஷ் கொந்தளிக்க பின்னர் அவர்களாகவே அடங்கி போயினர். எனக்கு பிடித்த காமெடியன் சதீஷ். ப்ளீஸ் நம்புங்க என்று பாலாஜி ட்வீட்டியதால் சண்டை ஆரம்பித்தது.

அட்ராசிட்டி

அட்ராசிட்டி

பைனான்ஸியர் அன்புச்செழியனின் கொடுமை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு அன்புச்செழியனின் அடாவடித்தனங்கள் பற்றி பலரும் பேசத் துவங்கினர்.

தேர்தல்

தேர்தல்

எங்க தேர்தல் நடந்தாலும் விஷால் நிற்பார் என்று நெட்டிசன்ஸ் கலாய்த்துக் கொண்டிருந்தபோது ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்.

ஆர்.கே. நகர்

ஆர்.கே. நகர்

விஷாலின் வேட்புமனு ஏற்கப்படவில்லை. இதையடுத்து அவர் சினிமா பாணியில் வீடியோ, ஆடியோ வெளியிட்டும் ஒன்றும் நடக்கவில்லை. அவரும் என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் யாரும் கேட்கவில்லை. அவரை அரசியலுக்கு வர விடாமல் ஆரம்பத்திலேயே தட்டி வைக்க தான் இப்படி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

புதுமுகம் அருண் பிரபு இயக்கத்தில் வெளியான அருவி படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பிரித்து மேய அவர் கோபத்தில் கொந்தளித்து ட்வீட்டினார். இயக்குனருக்கு கள்ளக்காதல் இருக்கும் என்ற அளவுக்கு இறங்கி வந்து ட்வீட்டினார் லட்சுமி. இதற்கிடையே அருவி அஸ்மா என்கிற அரபு மொழிப் படத்தின் காப்பி என்ற பேச்சு கிளம்பியது. நான் அருவி ரிலீஸான பிறகே அதுவும் ட்வீட்டுகளை பார்த்த பின்னரே அஸ்மா படத்தை பார்த்தேன் என்கிறார் அருண் பிரபு.

English summary
Cine industry has seen its own share of controversies in the year 2017. Vishal is the man who started and ended the year with contorversies. Let 2018, be a peaceful year for the Tamil cinema industry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X