Bison: தியேட்டருக்குள் மழை வெள்ளம்.. பைசன் படத்தை கிளைமாக்ஸ் வரை பார்த்து விட்டு வெளியேறிய ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், பைசன். படத்தில் துருவ் விக்ரம், பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தியேட்டர் ஒன்றில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, பெய்த மழையால் தியேட்டருக்குள் மழை வெள்ளம் வந்துவிட்டது. ஆனாலும் ரசிகர்கள் மழை வெள்ளத்திலும் படத்தைப் பார்த்துவிட்டு வெளியேறியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வேகமாக பரவி வருகிறது.

பைசன் - காளமாடன் படம் இந்திய கபடி அணியின் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படத்தை உருவாக்கி உள்ளார்கள். படத்தில் நிஜ வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை படமாக்கி உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, இந்த படத்திற்கு ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பாராட்டுகள் குவிந்து வருகிறது. படத்திற்கு ரசிகர்கள் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்துள்ளதை நினைத்து படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.

Flood Waters Comes Into Theatre But Fans Watched Bison Movie Stared Dhruv Vikram Directed By Mari Selvaraj

வசூல்: படம் முதல் இரண்டு நாளில் சுமார் ரூபாய் 5 கோடிகள் முதல் ரூபாய் 8 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. பைசன் படத்திற்கு தேசிய விருதுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் படத்தில் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல் என்பது சமூகத்திற்கு தேவையான அரசியலாக உள்ளது. படம் முழுக்க வெட்டு குத்து இருந்தாலும், கபடி காட்சிகள், தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், காதல் காட்சிகள் என அனைத்தும் ரசனையின் உச்சம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

பாராட்டு: படத்தை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் புரெடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் அப்லாஸ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை பாராட்டிய பலரும், " இந்த படத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்திற்கு எதிராக மாரி செல்வராஜ் பேசிவிட்டார் என்று யாராலும் சொல்ல முடியாது. மிகவும் சென்சிட்டிவான பிரச்னை இது, பசுபதி பாண்டியன், வெங்கடேச பண்ணையாருக்கு இடையிலான பிரச்னையை பலரும் பேசத் தயங்குவார்கள். அவர்களுக்குள் பிரச்னை எங்கு தொடங்கியது என்று யாராலும் கூறவே முடியாது. இருபுறமும் தவறுகளும், இருபுறமும் அவரவர் தரப்பு நியாயங்களும் இருக்கும். இவர்களுக்கு இடையிலான முரணை மிகச் சிறப்பாக கையாண்டுள்ளார், மாரி. இந்த கதாபாத்திரங்களின் மூலம் மொத்த சமூகத்தையும் நோக்கி கேள்வி கேட்டுள்ளார் என்றும் பாராட்டி வருகிறார்கள்.

Flood Waters Comes Into Theatre But Fans Watched Bison Movie Stared Dhruv Vikram Directed By Mari Selvaraj

தியேட்டருக்குள் வெள்ளம்: இந்நிலையில் பைசன் படம் ராஜபாளையத்தில் உள்ள சித்ரா சினிமாஸில் திரையிடப்பட்டுள்ளது. படம் திரையிட்டுக் கொண்டு இருக்கும் போது, மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மிகவும் கனமாக பெய்த மழையால் தியேட்டருக்குள் மழை வெள்ளம் வந்துவிட்டது. ஆனால் ரசிகர்கள் மழை வெள்ளத்திலும் இருந்து படத்தை முழுவதுமாக பார்த்து விட்டுச் சென்றுள்ளார்கள். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த பலரும், "தியேட்டர் குள்ள மழை வந்து வெள்ளம் வந்தாலும் சரி, Bison படத்தை பார்த்து முடிச்சிட்டு தான் வெளிய போவாங்க போல" என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் பலர் தியேட்டர் நிர்வாகத்தை விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X