twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    yearender2018: சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கதை இல்லைனா படம் 'ஊஊஊஊ' தான்

    By Siva
    |

    மும்பை: எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் கதை இல்லை என்றால் படம் ஓடாது என்பதை இந்த ஆண்டு பாலிவுட்டின் கான்கள் உணர்ந்திருப்பார்கள்.

    பாலிவுட்டின் முக்கிய நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் இந்த ஆண்டு பாடம் கற்றிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. யாராக இருந்தாலும் கதை நன்றாக இல்லை என்றால் படம் ஓடாது என்பதற்கு கான்களின் படங்கள் ஃபிளாப் ஆனது சிறந்த எடுத்துக்காட்டு.

    அதிலும் ஆமீர் கானின் தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படுதோல்வி அடைந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

    பாக்ஸ் ஆபீஸ்

    பாக்ஸ் ஆபீஸ்

    30 ஆண்டுகளாக பாக்ஸ் ஆபீஸை ஆண்ட கான்களின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. யார் நடிக்கிறார் என்பது முக்கியம் அல்ல கதை எப்படி இருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கிவிட்டனர் ரசிகர்கள். இந்த ஆண்டு வெளியான ஆயுஷ்மான் குரானாவின் பதாய் ஹோ மற்றும் அந்தாதுன் ஆகிய இரண்டு படங்களுமே ரூ. 100 கோடியை தாண்டி வசூல் செய்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது நடிகர் அல்ல மாறாக கதை தான் ஹீரோ என்பதை காட்டியுள்ளது.

    இமேஜ்

    இமேஜ்

    கான்களை பொறுத்தவரை அவர்களின் படங்களை எடுக்கும் இயக்குனர்களும் சரி, தயாரிப்பாளர்களும் சரி கதையை விட அவர்களின் இமேஜிற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இனியும் இமேஜை வைத்து படத்தை ஓட்ட முடியாது என்பதை தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் மற்றும் ஷாருக்கானின் ஜீரோ ஆகிய படங்களின் தோல்வி உணர்த்தியுள்ளது.

    தோல்வி

    தோல்வி

    ஷாருக்கான் ஜீரோ படம் ஜீரோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அவர் நடிப்பில் கடைசியாக சூப்பர் ஹிட்டான படம் சென்னை எக்ஸ்பிரஸ். 2013ம் ஆண்டில் வெளியான அது ரூ. 424 கோடி வசூலித்தது. அதன் பிறகு வெளியான ஏ தில் ஹை முஷ்கில், ஹாரி மெட் செஜால் ஆகிய படங்கள் ரூ. 100 கோடியை கூட தொடவில்லை.

    சல்மான் கான்

    சல்மான் கான்

    2018ம் ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கிய பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் சல்மான் கான். அவர் படங்கள், டிவி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலம் ரூ. 253.25 கோடி சம்பாதித்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ரேஸ் 3 படம் சரியாக ஓடவில்லை. ஆமீர் கான் கதையை தேர்வு செய்வதில் தவறு செய்ய மாட்டார் என்று ரசிகர்கள் நம்பினார்கள். தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தானை பார்த்த பிறகு அந்த நம்பிக்கை போய்விட்டது. படம் அந்த அளவுக்கு படுதோல்வி அடைந்துள்ளது.

    படங்கள்

    படங்கள்

    ஒரு ஆண்டில் வெளியாகும் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கானின் பட வருவாய் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு அவர்களின் பட வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. அதே சமயம் பெரிய இமேஜ் இல்லாதவர்களின் படங்கள் எளிதில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

    English summary
    Even the three Khans of Bollywood can't make a movie hit when there is no story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X