For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ”வில்லு” படம் தெலுங்கு ரீமேக்குன்னு நினைக்கிறீங்களா? அப்போ நீங்க பாவம் பாஸ்!

  |

  சென்னை: பிற மொழிகளில் ஹிட் அடித்து தமிழில் பிளாப் ஆன படங்களை பார்க்கலாம். ஒரு மொழியில் ஒரு படம் ஹிட் ஆனால், அதே திரைப்படத்தை வேறு நடிகர்களை வைத்து ரீமேக் செய்து மற்ற மொழிகளில் ரிலீஸ் செய்து ஹிட் அடிப்பார்கள்.

  மீந்துபோன வடையை உதிர்த்து பகோடா போட்டு விற்பதுபோலதான் என்றாலும், சிலநேரம் பகோடா விற்கும், சில நேரங்களில் நமத்துப் போகும்.

  அதுபோல் இந்தி, தெலுங்கு, மலையாளத்தில் ஹிட்டாகி... தமிழிலும் ஆகும் என நினைத்த படங்கள் பல ஹி.. ஹி.. என ஆகியிருக்கிறது.

  ஒஸ்தி

  ஒஸ்தி

  அபினவ் காஷ்யப் இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் பலர் நடித்து 2010ல் வெளியான திரைப்படம் தபாங். எப்பவுமே ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு பீடாவுக்கு வெயிட் பன்றமாதிரி நெஞ்சை நிமித்தி நடக்குற சல்மான் போலீஸ் கெட்டப் போட்டு அசத்திய படம். 42 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 215 கோடி வசூல் சாதனை படைத்தது. அந்த நம்பிக்கையில், இயக்குனர் தரணி அப்படியே நம்ம எஸ்டிஆரை வைத்து தபாங் படத்தை ஒஸ்திங்குற பேர்ல எடுத்தார். எதிர்பார்த்த அளவு வெற்றிகிடைக்கவில்லை. சேட்டிலைட் ரைட்ஸ், ஆன்லைன் ரைட்ஸ்னு அப்படி இப்படி வித்து புரட்யூசர் தலையில துண்டப்போடாம காப்பாத்துனாங்க. "வாடி வாடி க்யூட் பொண்டாட்டின்னு" சிம்பு பொண்டாட்டி ஸ்பெஷல் பாட்டெல்லாம் பாடி கல்யாண ஆசை வந்தமாதிரி ஆடுனாரு. ஆனா இன்னும் மனுஷன் ஒண்டிக்கட்டையாகத்தான் இருக்கார்.

  சாகசம்

  சாகசம்

  த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், இலியானா நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படம் ஜுலாயி. 34 கோடி பட்ஜெட் போட்டு எடுத்து 104 கோடி வசூலாகி லாபம் சம்பாதிச்சு கொடுத்தது. பிரசாந்தை எப்படியாவது முன்னணி நடிகரா மாத்திடனும்னு கங்கனம் கட்டிகிட்டு இருக்க ஃபாதர் தியாகராஜன், சொந்தமா கதை கேட்டு படமெடுத்தாதான் சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி ஆகிடுதேன்னு நம்பி, ஏற்கனவே தெலுங்குல ஹிட்டான ஜூலாயி படத்தை ரீமேக் செஞ்சாரு. அருண்ராஜ் வர்மா இயக்கத்துல பிரசாந்த், அமண்டா ரொசாரியோ மற்றும் பலர் நடிச்சிருந்தாங்க. மொதலுக்கு மோசமில்லைன்னாலும் எதிர்பார்த்த அளவுக்கு போகல. அந்த படத்தை பிரசாந்தே கெட்ட கனவா நெனச்சி மறந்துட்டாருங்க.

  குசேலன்

  குசேலன்

  மம்மூட்டி, ஸ்ரீநிவாஸ், மீனா மற்றும் பலர் நடித்து 2007ல் வெளியான மலையாளப் படம்தான் கத பறையும்போல். மோகனன் இயக்கியிருந்தார். ஆஹா... எந்தா ஸ்டோரி..! எந்தா நடிப்பு... அப்படின்னு மலையாள ரசிகர்கள் தூக்கி வச்சி கொண்டடிய படம். ஆனால் அதே படத்தை இயக்குனர் பி.வாசு "சூப்பர் ஸ்டார் அசோக்குமார்" அப்படின்னு ரஜினிகாந்துக்கு பெயரை மாத்தி குசேலன்னு வச்சாங்கா பாருங்க. ஸ்பெல்லிங் மிஸ்டேக்குலேயே மிஸ்டேக்குங்குற மாதிரி நம்ம ஆட்கள் அதை கண்டுக்கவே இல்ல. ரஜினிகாந்த், நயன்தாரா, வடிவேலு, பசுபதின்னு நட்சத்திர பட்டாளமே இருந்தும் படம் பார்டல தான் பாஸ் ஆச்சு.

  சேட்டை

  சேட்டை

  பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரிப்பில், அவருடைய உறவினர் இம்ரான்கான் நடிப்பில் வெளியான படம் டெல்லி பெல்லி. அபினய் தியோ இயக்கியிருந்தார். வயித்த கலக்குறமாதிரியான காட்சிகள் பல இடத்துல இருந்தாலும் இந்தப் படம் இந்தியில் ஒரு கலக்கு கலக்கியது. அதே நம்பிக்கையோட தமிழ்ல ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, ஹன்சிகாவை வைத்து ஆர்.கண்ணன் சேட்டைன்னு தமிழ்ல இயக்கினார். இந்தி மாதிரி தமிழ்ல கலக்கும்னு எதிர்பார்த்தாங்க ஆனா இங்க கலங்கிடுச்சு. படத்தோட இண்டர்வல் முடிஞ்சு உள்ள போனாகூட பாத்ரூமிலேயே இருக்க மாதிரி ஃபீலாவுதுன்னு ரிவ்யூவ்வெல்லாம் போட்டாங்க.

  வில்லு

  வில்லு

  முஸ்தான் பர்மாவலா, அப்பாஸ் பர்மாவாலா (ஆயிரம் வாலா மாதிரி இருக்கேன்னு யோசிக்காதீங்க அது இயக்குனர் பெயர்) இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இயக்கிய இந்திப் படம் சோல்ஜர். இதுல, பாபி தியோல், ப்ரீத்தி ஜிந்தா நடிச்சிருந்தாங்க. இந்த படத்தை பார்த்துட்டு அப்படியே நம்ம விஜய்யண்ணாவை வைத்து எடுக்கலாம் என பிரபுதேவா திட்டமிட்டு எடுத்த படம் வில்லு. பொதுவா தெலுங்கு பட ரிமேக் தான விஜய் பண்ணுவாரு? எப்படி இந்தி ரிமேக்குன்னல்லாம் கேட்கக் கூடாது. ஒரு சேஞ்சுக்கு பண்ணது. இந்தியில வசூல் பண்ண சோல்ஜர் தமிழ்ல பேஜாராகிடுச்சி. அதுனால நாம வருத்தப்பட வேண்டியதில்லை. இப்பவும் வில்லுன்னு சொன்னா கெணத்துல நயன்தாராவுக்கு வாளி இழுக்க கத்துகொடுக்குற சீன் ஞாபகத்துக்கு வருதுல்ல. அது போதும்!

  English summary
  Other language remake movie flopped in Tamil.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X