twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படியே காப்பி, இதெல்லாம் ஒரு பொழப்பு: ஹிட் படத்தை விளாசிய போட்டோகிராபர்

    By Siva
    |

    மும்பை:கங்கனா ரனாவத்தின் ஜட்ஜ்மென்டல் ஹை கியா பட போஸ்டரை பார்த்த பெண் புகைப்படக் கலைஞர் பேரதிர்ச்சி அடைந்தார்.

    பிரகாஷ் கோவிலமுடி இயக்கத்தில் கங்கனா ரனாவத், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் வித்தியாசமாக நடித்த ஜட்ஜ்மென்டல் ஹை கியா படம் கடந்த 26ம் தேதி ரிலீஸானது. படத்தின் வசூல் ரூ. 30 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

    Flora Borsi accuses Judgemental Hai Kya of plagiarism

    இந்நிலையில் ஜட்ஜ்மென்டல் ஹை கியா பட போஸ்டர்கள் ஹங்கேரியை சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஃப்ளோரா போர்ஸி கண்ணில் பட்டது. அதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் எடுத்த புகைப்படத்தை அப்படியே காப்பியடித்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

    இதையடுத்து ஃப்ளோரா தான் எடுத்த புகைப்படம் மற்றும் கங்கனா பட போஸ்டரை சேர்த்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு கூறியிருப்பதாவது,

    ஏதாவது ஒற்றுமைகள் தெரிகிறதா? இது பிரபல பாலிவுட் படமான ஜட்ஜ்மென்டல் ஹை கியாவின் போஸ்டர். அவர்கள் என்னிடம் அனுமதியும் கேட்கவில்லை, என்னை அணுகவும் இல்லை. பெரிய நிறுவனங்கள் ஃப்ரீலான்ஸ் கலைஞர்களின் உழைப்பை காப்பியடிப்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படம் ரிலீஸ் குறித்து அறிவித்து அதை பார்க்குமாறு வலியுறுத்தி ராஜ்குமார் ராவ் போட்ட ட்வீட்டும் ஃப்ளோரா கண்ணில் பட்டது. அந்த ட்வீட்டுக்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, இந்த புகைப்படம் நான் எடுத்த புகைப்படம் போன்றே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    ப்ளோராவின் கமெண்ட்டை பார்த்த நெட்டிசன்கள் சிலர், இப்படித் தான் காப்பியடித்து பாலிவுட்டில் பிழைப்பு நடத்துகிறார்கள். உங்களுக்கு தாமதமாக தெரிந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். சிலரோ, மேடம் வழக்கு போடுங்க, சும்மா விட்டுவிடாதீர்கள் என்று கூறியுள்ளனர்.

    English summary
    Hungarian photographer Flora Borsi has accused the makers of Judgemental Hai Kya of plagiarism.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X