»   »  ஃபுட் பாய்சனிங்: நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதி

ஃபுட் பாய்சனிங்: நடிகை ரம்யா மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஃபுட் பாய்சனிங் காரணமாக நடிகை ரம்யா பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

குத்து, கிரி, பொல்லாதவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளவர் ரம்யா. காங்கிரஸ் கட்சியில் உள்ளார். முன்னாள் எம்.பி.யான அவர் அரசியலுடன் சேர்த்து சமூக சேவை செய்து வருகிறார்.

Food poisioning: Actress Ramya hospitalised

சனிக்கிழமை காலை ரம்யாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அன்று மதியமே பெங்களூரில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து விக்ரம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் கூறுகையில்,

ஃபுட் பாய்சனிங் காரணமாக ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சனிக்கிழமை மாலையே அவர் வீடு திரும்பிவிட்டார். அவரை பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர் நலமாக உள்ளார் என்றார்.

English summary
Food poisioning: Actress Ramya hospitalised Actress cum politician Ramya was admitted at a hospital in Bangalore. She was given treatment for food poisoning.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil