»   »  முட்டாள்கள் பிதற்றுவார்கள், நாய்கள் குரைக்கும்: கமல் மேட்டரால் கடுப்பான கவுதமி

முட்டாள்கள் பிதற்றுவார்கள், நாய்கள் குரைக்கும்: கமல் மேட்டரால் கடுப்பான கவுதமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மீண்டும் கமல் ஹாஸனுடன் நெருக்கம் காட்டுகிறார் என்று கூறியவர்களுக்கு நடிகை கவுதமி ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை கவுதமியும், உலக நாயகன் கமல் ஹாஸனும் திருமணம் செய்யாமலேயே 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

மகள் சுப்புலட்சுமியின் நலன் கருதி இந்த முடிவை எடுத்ததாக கவுதமி தெரிவித்தார்.

கமல்

கமல்

கமல் ஹாஸனை பிரிந்த பிறகு கவுதமி அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருக்கிறார். கமலை பிரிந்தாலும் அவர் பற்றி எதுவும் தவறாக பேசவில்லை கவுதமி.

மகள்

மகள்

தனது மகள் சுப்புலட்சுமியை நடிகையாக்கி பார்க்க ஆசைப்படுகிறார் கவுதமி. அதனால் அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

மீண்டும்

மீண்டும்

கவுதமியும், கமலும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக வெளியான தகவலை பார்த்து கவுதமி கடுப்பாகியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

முட்டாள்

முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும். நான் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டேன். மற்றவர்களும் அவர்களின் வாழ்வை வாழ வேண்டும். ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கவுதமி.

English summary
Actress Gautami tweeted that, 'Fools chatter & dogs bark. I've moved on & every1 else shld get on wit their lives & do something dat really matters'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil