»   »  தமிழில் உருவாகும் கால்பந்து படம்! - ஃபர்ஸ்ட் லுக்!

தமிழில் உருவாகும் கால்பந்து படம்! - ஃபர்ஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து '7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி' எனும் படம் தயாராகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட எஸ்.ஆர்.பிரபாகரன் பெற்றுக்கொண்டார்.

'சுந்தரபாண்டியன்', 'இது கதிர்வேலன் காதல்' உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராகப் பணியாற்றியுள்ள டான்பாஸ்கோ, '7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படம் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்து ஜெயிக்கும் கால்பந்து அணி ஒன்றின் கதையாம்.

Football movie in tamil

ஜி.டி. புரொடக்ஷன்ஸ் சார்பில் சேலம் ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு மணி ராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். இ.ஜே.ஜான்சன் இசையமைக்கிறார். ரம்யா இமாகுலேட் கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார். ஜான் பிரிட்டோ கலை வடிவமைப்பை மேற்கொள்கிறார்.

Football movie in tamil

கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட 'வெண்ணிலா கபடிக்குழு', கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு 'சென்னை -28', 'ஜீவா' படங்கள் வெளிவந்தன. குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு 'பூலோகம்', 'இறுதிச் சுற்று' படங்கள் வந்தன. இப்போது கால்பந்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகிறது.

Football movie in tamil
English summary
' 7 star idhu punnai nagar ani' movie is based on the game of football.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil