தமிழ் திரையுலகில் முதல் முறையாக ரசிகர்கள் வெளியிட்ட “மாறன்” டிரெய்லர்... எப்படி இருக்கு ?

சென்னை : தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக தனுஷ் நடித்த மாறன் படத்தின் டிரைலரை ரசிகர்களே ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். மிரட்டலான இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்து, லைக்குகளை குவித்து வருகிறது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "மாறன்". இயக்குநர் கார்த்திக் நரேனுடன் இணைந்து ஷர்பு மற்றும் சுஹாஸ் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் 2022 மார்ச் 11 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியாகிறது.

"மாறன்" திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் TG தியாகராஜன் வழங்குகிறார், செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சமுத்திரக்கனி, கிருஷ்ண குமார், மாஸ்டர் மகேந்திரன், ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக

சினிமா வரலாற்றில் முதல் முறையாக

மாறன் படத்தின் டிரெய்லரை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக, ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும். ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரெய்லரை, டிவிட்டர் தளத்தின் புதிய வசதியை பயன்படுத்தி ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

எப்படி ரசிகர்கள் வெளியிட்டார்கள்

எப்படி ரசிகர்கள் வெளியிட்டார்கள்

டிவிட்டரின் இந்த புதிய வசதியான Twitter Unlock மூலம், ரசிகர்கள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து, இந்த டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்திய முதல் படமாக "மாறன்" திரைப்படம் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் இந்த புதிய அனுபவத்தால் மிகப்பெரும் உற்சாகத்துடன் டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர். மாறன் டிரெய்லர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் அதன் அதிகரப்பூர்வ YouTube பக்கத்திலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

மாறன் டிரைலர் எப்படி இருக்கு

மாறன் டிரைலர் எப்படி இருக்கு

பத்திரிக்கையாளரான தனுஷ், அரசியல்வாதியான சமுத்திரக்கனி பற்றிய பல ரகசியங்களை அம்பலப்படுத்துகிறார். இதனால் அவர் சந்திக்கும் எதிர்ப்புக்கள், பிரச்சனைகள், அவற்றை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பது தான் படத்தின் கதை என்பது டிரைலரிலேயே தெளிவாக தெரிகிறது. தங்கை சென்டிமென்ட், மாளவிகா மோகனன் உடனான காதல் ஆகியவற்றை கலந்து விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக மாறன் படத்தை தந்துள்ளனர். இந்த டிரைலர் வெளியிடப்பட்ட ஒரு மணி நேரத்தில் 25,000 பார்வைகளை பெற்றுள்ளது.

ட்விட்டர் கொடுத்த சர்ப்ரைஸ்

ட்விட்டர் கொடுத்த சர்ப்ரைஸ்

தனுஷ் ரசிகர்களுக்கு மற்றொரு சர்ப்ரைசாக எமோஜி வசதியையும் ட்விட்டர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு முன் விஜய்யின் மெர்சல் படத்திற்கு தான் இந்த வசதியை ட்விட்டர் முதன் முதலில் உருவாக்கியது. இதைத் தொடர்ந்து ரஜினியின் காலா, தர்பார், சூர்யாவின் என்ஜிகே, சூரரை போற்று, விஜய்யின் பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது மாறன் படத்தின் டிரைலர் ரிலீசை முன்னிட்டு மீண்டும் இந்த வாய்ப்பை ட்விட்டர் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X