பிரஷாந்த்தின் முதல் திருமணத்தில் நடந்தது என்ன...முதல் முறையாக மனம் திறந்த தியாகராஜன்

சென்னை : நடிகர் பிரஷாந்த்தின் முதல் திருமணம் தோல்வியில் முடிய என்ன காரணம். எதனால் விவகாரத்து நடைபெற்றது என பிரஷாந்த்தின் தந்தையும், நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் முதல் முறையாக ஓப்பனாக பேசி உள்ளார்.

நடிகர் பிரஷாந்த், 1990 ம் ஆண்டு ரிலீசான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் 17 வயதில் ஹீரோவானவர். அடுத்தடுத்து பல படங்களில் நடித்து, டாப் ஹீரோ ஆனார். ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனார். அப்படி இருந்தவரின் படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.

 ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரஷாந்த்

ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரஷாந்த்

தற்போது தனது தந்தை தியாகராஜன் இயக்கும் அந்தகன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார். இந்த படம் இந்தியில் சூப்பர் ஹிட் ஆன அந்துதன் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். விரைவில் ரிலீசாக உள்ள இந்த படத்தை விட சமீபத்தில் பிரஷாந்த் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக வெளியான தகவல் தான் அனைவரையும் அவரை பற்றி பேச வைத்துள்ளது.

முதல் திருமணத்தில் என்ன நடந்தது

முதல் திருமணத்தில் என்ன நடந்தது

பிரஷாந்த், தொழிலதிபரின் மகளான கிரகலட்சுமி என்பவரை 2005 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரஷாந்த் மனைவியை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு விவாகரத்தானதாக தகவல் வெளியானது. உண்மையில் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பல ஆண்டுகள் கழித்து தியாகராஜன் தற்போது பேட்டி அளித்துள்ளார்.

பிரஷாந்த் காதலித்திருக்கலாம்

பிரஷாந்த் காதலித்திருக்கலாம்

அவர் கூறுகையில், இதை பற்றி பேச வேண்டாம் என இருந்தேன். ஆனால் மீடியாக்களில் பல விதமான தகவல்கள் பரவியதால் தற்போது இது பற்றி பேசுகிறேன். நானும் எனது மனைவியும் ஏற்பாடு செய்து தான் பிரஷாந்த்திற்கு கிரகலட்சுமியை திருமணம் செய்து வைத்தோம். நான் செய்த தவறு அது தான். ஒருவேளை அவர் யாரையாவது காதலித்து, அவரையே திருமணம் செய்து வைத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என தற்போது நினைக்க தோன்றுகிறது.

இவ்வளவு நடந்திருக்கா

இவ்வளவு நடந்திருக்கா

திருமணமாகி ஒரு மாதத்தில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற கிரகலட்சுமி திரும்பி வரவேயில்லை. பிறகு தான் பிரஷாந்த்தின் ரசிகர் ஒருவர் மூலமாக அவருக்கு ஏற்கனவே பதிவு திருமணமானதும், அதை மறைத்து இரண்டாவதாக பிரஷாந்த்திற்கு திருமணம் செய்து வைத்ததும் தெரிந்தது. அவர்கள் குடும்பத்தில் நிறைய வக்கீல்கள், நீதிபதிகள் இருப்பதால் அவர்களின் ஐடியா படி தங்கள் தரப்பு தவறை மறைக்க எங்கள் மீது வரதட்சணை கொடுமை கேஸ் போட்டனர். பிரஷாந்த் தான் உண்மையை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆதாரங்களுடன் உண்மையை நிரூபித்தார். பிறகு தான் இந்த திருமணம் செல்லாது என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

பிரஷாந்த் விவாகரத்து செய்யவில்லை

பிரஷாந்த் விவாகரத்து செய்யவில்லை

ஆனால் பிரஷாந்த் விவாகரத்து செய்து விட்டதாக அனைவரும் சொல்கிறார்கள். உண்மையில் அவர் விவாகரத்து செய்யவே இல்லை. உண்மையை வெளியில் கொண்டு வந்தார் அவ்வளவு தான். அந்தகன் படம் ரிலீசானதும் பிரஷாந்த்திற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளோம். இதுவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். பிரஷாந்த்திடம் இன்னும் 2 படங்களில் நடிக்க பேசப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்றார்.

தாணு வெளியிடும் அந்தகன்

தாணு வெளியிடும் அந்தகன்

அந்தகன் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தான் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய போகிறார். இந்த படத்தில் பிரஷாத் உடன் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா விஜயக்குமார், ஊர்வசி, யோகி பாபு, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X