Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் பட ப்ரொமோஷனுக்காக கமல் அதை செய்ய இது தான் காரணமா?
சென்னை : விக்ரம் படம் பற்றி அடுத்தடுத்த பல தகவல்கள் வெளியாகி ஆச்சரியப்பட வைத்து வருகிறது. விக்ரம் ஆடியோ விழாவில் கமல் அணிந்திருந்த கருப்பு நிற லெதர், உபர் கூல் ஜாக்கெட் பற்றிய தகவல் நேற்று வெளியானது. இன்று படத்தில் கமல் வரும் காட்சிகள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் ரிலீசாக உள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விக்ரம் டிரைலர் இது வரை யூட்யூப்பில் 22 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. இதில் சூர்யா நடித்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி, பலரும் ரிப்பீட் மோடில் டிரைலரை பார்த்து வருகிறார்கள். விக்ரம் டிரைலர் பெற்றுள்ள பார்வைகள், ரஜினியின் அண்ணாத்த பட டிரைலருக்கு கிடைத்த பார்வைகளை விட அதிகம்.
Cannes
2022
திரைப்பட
விழாவில்
விக்ரம்
டிரைலர்...கமலோட
பிளான்
இது
தானா?

கேன்ஸ் விழாவில் விக்ரம் டிரைலர்
விக்ரம் டிரைலர் தற்போது ஃபிரான்சில் நடைபெற்று வரும் Cannes சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கமல் Cannes திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். இதனால் சர்வதேச ஆடியன்ஸ்களும் விக்ரம் டிரைலர் பற்றி பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல் ரோல் இதுதானா
லேட்டஸ்ட் தகவலின் படி, விக்ரம் படத்தில் கமல், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரோலில் நடித்திருக்கிறாராம். மனைவியை இழந்து மகனுடன் வாழும் கமல், கண் பார்வை இல்லாதவராகவும், குடிகாரர் ரோலிலும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. கமல் இளமை தோற்றத்தில் இருக்கும் சீன்கள் பிளாஷ்பேக்கில் காட்டப்பட உள்ளதாம்.

கமலின் ப்ரொமோஷன் பிளான்
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபல யூட்யூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு சென்று கமல் விருந்து சாப்பிட்டுள்ளாராம். இந்த வீடியோ விரைவில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது . இதனால் எதற்காக அந்த சேனலை கமல் தேர்வு செய்தார் என அனைவரும் கேட்டு வந்தனர். அதற்கு முக்கியமான காரணம் ஒன்று உள்ளதாம்.
Recommended Video

இதுக்கு தான் கமல் அதை செய்தாரா
விக்ரம் படத்தின் டீசரில் பெரிய டைனிங் டேபிளில் முக மூடி அணிந்து அமர்ந்திருக்கும் பலருக்கு கமல் தலைவாழை இலை போட்டு, அசைவ விருந்து அளிப்பதாக காட்டப்படும். ஏராளமான அசைவ வகைகள் இலையில் கமல் முன் பரிமாறப்பட்டிருப்பது போன்ற போட்டோ செம வைரலானது. இந்த சீனில் காட்டப்படும் அசைவ உணவு வகைகள் அனைத்தையும் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்தவர்கள் தான் சமைத்தார்களாம். அதனால் தான் ப்ரொமோஷனுக்காக கமல் அந்த சேனலில் விருந்து சாப்பிட்டுள்ளாராம்.