”விருமன்” படத்தை இந்த காரணத்திற்காக நீங்கள் ரசித்து பார்க்கலாம்..ஏன்னு நீங்களே பாருங்க!

சென்னை : கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'விருமன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. கார்த்தியின் சுல்தான் படத்திற்கு பிறகு இப்படம் வெளியாக உள்ளது.

விருமன் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் படத்திற்கான முன்பதிவுகள் அனைத்து இடங்களிலும் சிறப்பாக உள்ளன.

விருமன் திரைப்படம் உலகளவில் அதிக திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுடன் படம் நாளை வெளியாக உள்ளது. கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தை இந்த 5 காரணத்திற்காக பார்க்கலாம் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பல சவாலான கதாபாத்திரங்கில் நடித்த, கார்த்தி இப்படத்தில் கிராமப்புற இளைஞனாக நடித்திருக்கிறார். கார்த்தியின் வெற்றிப்படங்களான பருத்திவீரன், கொம்பன் போன்ற படங்களின் வரிசையில் விருமன் படம் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காதல், நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் திரைப்படமாக விருமன் இருக்கும்.

திரையில் பார்க்க ஆர்வம்

திரையில் பார்க்க ஆர்வம்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் இந்த படத்தில் நடிகையாக மட்டுமின்றி பாடகியாகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். கஞ்சாப்பூவு கண்ணால பாடலில் அதிதியின் எக்பிரஷனைப்பார்த்து மிரட்டுபோன ரசிகர்கள் அவரை திரையில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.

குடும்ப உறவுகள்

குடும்ப உறவுகள்

தேவராட்டம், கொம்பன், புலிக்குத்திப்பாண்டி போன்ற கிராமத்து கதை அம்ச திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் முத்தையா மீண்டும் கிராமத்து பின்னணியில் ஒரு கதையை கொடுத்து இருக்கிறார். குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இந்த படத்தில் மிகவும் அழகாக படமாக்கி உள்ளார்.

பல திருப்பங்கள்

பல திருப்பங்கள்

பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஜ்கிரண், ஆர்.கே.சுரேஷ், வடிக்கரசி,சரண்யா பொன்வண்ணன், மைனாநந்தினி, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்தியின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், அப்பாவாக பிரகாஷ் ராஜூடம் நடிக்கிறார்கள, மேலும் இப்படம் பல திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Director Muthaiyah Speech | எனக்கு ஒரு எல்லை வைச்சிருக்கேன் | Viruman *Kollywood
தரமான இசை

தரமான இசை

முத்தையாவின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். மேலும் படத்தில் யுவனின் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது எனலாம். விருமன் படத்தின் மூலம் யுவுன் சங்கர் ராஜா இரட்டிப்பு ஸ்கோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிதி ஷங்கருடன் மாவீரன் பாடலை யுவன் பாடி உள்ளார். இந்த பாடலுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X