»   »  உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷாரூக்கான், அக்ஷய்!

உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்த ஷாரூக்கான், அக்ஷய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் இந்திய நடிகர்கள் ஷாரூக்கான், அக்ஷய் குமார் இடம் பெற்றுள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை சர்வதேச அளவில் அதிக சம்பளம் வாங்கும் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. ஜூன் 2015 தொடங்கி ஜூன் 2016 வரையிலான இந்தப் பட்டியலில் பாடகர் டெய்லர் ஸ்விப்ட் 170 மில்லியன் டாலர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இதில் எழுத்தாளர் ஜேம்ஸ் பேட்டர்சன் மூன்றாவது இடத்திலும், கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது இடத்திலும் உள்ளனர். கூடைப்பந்து விளையாட்டு வீரர் லீபிரான் ஜேம்ஸ், இசைக்கலைஞர் மடோனா ஆகியோர் 11மற்றும் 12 வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

Forbes Highest Paid Celebrity List

நடிகர் ஜாக்கிசான் 21 வது இடத்திலும், ஹாலிவுட் நடிகர் டிவைன் ஜான்சன் 19 வது இடத்திலும் நடிகை கிம் கர்தேஷியன் 43 வது இடத்திலும் இருக்கின்றனர்.

சர்வதேச அளவிலான இந்தப் பட்டியலில் இந்திய பிரபலங்களான ஷாரூக்கான், அக்ஷய் குமார் இருவரும் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில் ஷாரூக்கான் 33 மில்லியன் டாலர்களுடன் 86 வது இடத்தையும், அக்ஷய் 31.5 மில்லியன் டாலர்களுடன் 94வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கடந்தாண்டு 76 வது இடத்திலிருந்த அக்ஷய் தற்போது 94 வது இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood Actors Shah Rukh Khan and Akshay Kumar Dominated in Forbes Highest Paid Celebrity List.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil