»   »  உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்... டாப்-10-ல் ஷாருகான், அக்‌ஷய் குமார்!

உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியல்... டாப்-10-ல் ஷாருகான், அக்‌ஷய் குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர்களான ஷாருகான், அக்‌ஷய் குமார், சல்மான் கான், அமிதாப் பச்சன், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

உலகில் அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் குறித்த பட்டியலை அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. மல்யுத்ததில் இருந்து திரைத் துறைக்குள் புகுந்த டுவைன் ஜான்சன்(தி ராக்) இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Forbes : SRK, Akshay Kumar in Top 10 Highest Paid Actors in the world

பாலிவுட் நடிகர்களான ஷாருகான், அக்‌ஷய் குமார் ஆகியோர் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர். ஷாரூக் கான் 8-வது இடத்தை பிடித்துள்ளார். இவரது வருமானம் 3.3 கோடி டாலர் (ரூ.221 கோடி). ஹாலிவுட் நடிகரான ராபர்ட் டொவ்னேவும் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.

மற்றொரு பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் இந்தப் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது வருமானம் 3.1 கோடி டாலர் (ரூ. 207 கோடி). இதேபோல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டும் 10-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Forbes : SRK, Akshay Kumar in Top 10 Highest Paid Actors in the world

சல்மான் கான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் 14-வது இடம் பிடித்துள்ளார். இவரது வருமானம் 2.85 கோடி டாலர் (ரூ. 191 கோடி). அமிதாப் பச்சன் இந்தப் பட்டியலில் 18-வது இடத்தில் உள்ளார். இவரது வருமானம் 2 கோடி டாலர் (ரூ. 134 கோடி) என்று போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Shah Rukh Khan and Akshay Kumar are amongst world's top 10 highest paid actors. A list released by Forbes Magazine puts SRK in the eight spot and Akshay Kumar in the 10th spot of Forbes Magazine's annual worlds highest paid actors list.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil