ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த கமல்...வெளிநாட்டு விமர்சகர்கள் ஆச்சர்யம்
சென்னை : விக்ரம் படத்திற்காக கமல் செய்து வரும் ப்ரோமோஷன் வேலைகள் வேற லெவலில் உள்ளது. மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் சென்று விக்ரம் பட ப்ரொமோஷனை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை நேற்று நடைபெற்ற விக்ரம் பிரஸ்மீட்டிலும் அறிவித்துள்ளார்கள்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டி வருகிறது.

விக்ரமிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
விக்ரம் படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ள நிலையில், படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 53 நிமிடங்கள் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிளான பத்தல பத்தல பாடல் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், செகண்ட் சிங்கிளாக போர்கண்ட சிங்கம் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அப்பா- மகன் சென்டிமென்ட் பாடலான இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வேற லெவல் ப்ரொமோஷன்
ஏற்கனவே படத்தின் ப்ரொமோஷனுக்காக ரயில்களில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரையப்பட்டது. இதைத் தொடர்ந்து யூட்யூப் சேனல் ஒன்று அளித்த விருந்தில் கமல் கலந்து கொண்டுள்ளார். இவை போதாது என்று படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். விக்ரம் பார்ட் 3 வர போகிறது என்பது போன்ற தகவல்கள் படத்திற்கு வேற லெவலில் ப்ரொமோஷனாக அமைந்துள்ளது.

சர்ப்ரைஸ் கொடுத்த கமல்
இந்நிலையில் ஆங்கில டிவி சேனல்கள் பாணியில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார் கமல். விக்ரம் படத்தின் ப்ரொமோஷனுக்காக, ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கமலை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என ரசிகர்களிடம் கேட்கப்பட்டது. கமல் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களின் பின்னால் வந்து நின்று கமல் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அத்தனை ரசிகரின் பின்னாலும் போய் நின்று சர்ப்ரைஸ் கொடுத்து, ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ளார் கமல். இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி செம டிரெண்டானது.

வெளிநாட்டு விமர்சகர்கள் ஆச்சரியம்
இந்த வீடியோவை பார்த்து வெளிநாட்டு விமர்சகர்கள் இருவர் ஆச்சரியப்பட்ட வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. ஆன்லைனில் பேசிக் கொள்ளும் அந்த விமர்சகர்கள், கமலை அவரின் ரசிகர்கள் ஆண்டவர் என குறிப்பிடுவது தொடங்கி, சினிமாவை தாண்டியும் அவரை ரசிகர்கள் எப்படியெல்லாம் உயர்வாக நினைத்து, தங்களின் வாழ்க்கையின் முன்னோடியாக நினைப்பதை பார்த்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். ரசிகர் ஒருவர் பேசுகையில், எல்லோரும் விபரம் தெரிந்த பிறகு தான் ஒருவருக்கு ரசிகர்கள் ஆவார்கள். ஆனால் நான் கமலுக்கு ரசிகனான பிறகு தான் எனக்கு விபரமே தெரிந்தது என்றார்.

இப்படி கூடவா இருப்பார்கள்
மற்றொருவர், வாழ்க்கையில் நான் பெரிதாக பொறாமை பட்டது அவரை பார்த்து தான். எப்படி இத்தனை திறமைகளுடன் இப்படி இருக்கிறார் என்ற நினைத்திருக்கிறேன் என்றார். இன்னொருவர் என்னுடைய வாழ்க்கையையே அவரை பார்த்து தான் டிசைன் செய்தேன் என சொல்கிறார். ரசிகர்கள் கமலை புகழ்ந்ததையும், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது, கமலை பார்த்ததும் ரசிகர்கள் உணர்ச்சி பெருக்கிலும், சந்தோஷத்திலும் நடந்து கொண்டதை பார்த்து ஆச்சரியப்பட்டு புகழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications