»   »  நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்

நம்ம சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை அவர் வேலை செய்யும் கிளினிக்கில் வைத்து மிரட்டியுள்ளனர்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள கிளினிக் ஒன்றில் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆணும், பெண்ணும் மருந்து பரிந்துரை செய்வது தொடர்பாக திவ்யாவை சந்தித்துள்ளனர்.

இது குறித்து திவ்யா கூறியிருப்பதாவது,

மருந்து

மருந்து

அமெரிக்காவை சேர்ந்த ஆண், பெண் மற்றும் இந்தியர் ஒருவர் என் கிளினிக்கிற்கு வந்து தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்குமாறு கூறினார்கள். மல்டிவைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் மருந்துகளை கொண்டு வந்தனர்.

முடியாது

முடியாது

அவர்கள் கொண்டு வந்த மருந்துகளில் ஓவர் டோஸாக வைட்டமின் இருந்தது. அதனால் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் அதிகம் என்பதால் அவற்றை பரிந்துரைக்க மறுத்துவிட்டேன்.

லஞ்சம்

லஞ்சம்

எங்களை நம்பி வருபவர்களுக்கு இதுபோன்ற மருந்துகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றேன். அதற்கு அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனர்.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் உள்ளவர்கள் எப்பொழுது இதுபோன்று அக்கறையுடன் நடக்கத் துவங்கினீர்கள். எங்களுக்கு இந்தியாவில் பல அரசியல்வாதிகளை தெரியும். வெளிநாட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட இந்தியர்களுக்கு தெரியவில்லை என்றனர். இந்தியாவுக்கே வந்து அவர்கள் இந்தியர்களை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சி அளித்தது என்றார் திவ்யா.

English summary
A man and woman from the USA threatened actor Sathyaraj's daughter Divya at her cilinic in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil