»   »  "5 கோடி ரூபாயை அடிச்சிட்டாங்க..." - கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்!

"5 கோடி ரூபாயை அடிச்சிட்டாங்க..." - கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் மோசடி புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
5 கோடி ரூபாய் அடித்த கயல் சந்திரன்

சென்னை : 'கயல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சந்திரன். கயல் சந்திரன் அதன் பிறகு அவர் 'ரூபாய்' என்ற படத்தில் நடித்தார்.

தற்போது 'கிரகணம்', 'திட்டம்போட்டு திருடுற கூட்டம்', 'பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கயல் சந்திரன் மீது தயாரிப்பாளர் ஒருவர் 5 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் புகார் கொடுத்துள்ளார்.

மோசடி புகார்

மோசடி புகார்

நடிகர் 'கயல்' சந்திரன் மீது தி.நகரைச் சேர்ந்த பிரபு வெங்கடாசலம் எனும் திரைப்படத் தயாரிப்பாளர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கயல் சந்திரன் 5 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

"நான் ஒரு சினிமா தயாரிப்பாளர் 2 படங்களை தயாரித்துள்ளேன். கயல் படத்தில் ஹீரோவாக நடித்த சந்திரன் மற்றும் ரகுநந்தன் ஆகியோர் என்னை சந்தித்து திட்டம்போட்டு திருடுற கூட்டம் என்ற படத்தை தயாரிக்கிறோம். அதில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்றார்கள்.

படத்தை தயாரித்தோம்

படத்தை தயாரித்தோம்

அதற்கு நான் ஒப்புக் கொண்டு 5 கோடி பணம் கொடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆனேன். 2 மூவி பப்ஸ், அக்ராஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனங்களை தொடங்கி அந்தப் படத்தை தயாரித்தோம்.

திருப்பித் தரவில்லை

திருப்பித் தரவில்லை

ஆனால் தற்போது என்னை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்கிற தகுதியில் இருந்து நீக்கி விட்டனர். கடந்த ஒரு வருடமாக நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

அந்தப் படத்தை தற்போது வெளியிட இருக்கிறார்கள். எனவே இது தொடர்பாக கயல் சந்திரன் மற்றும் ரகுநந்தன் மீது சட்ட நடவடிக்கை எடுத்து எனது பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்." என அந்தப் புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

English summary
Producer prabhu vengatachalam complaints against actor kayal chandran and raghu nandan. "Kayal chandran and Raghunandan have fraudulently received 5 cores from me", Producer complaints.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil